ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள்

ம.ப.பெரியசாமித் தூரன் நினைவுக் குறிப்புகள், பதிப்பாசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம், சாகித்ய அகாதெமி, விலை 260ரூ. கலைக்களஞ்சியனின் கதை இந்திய மொழிகளிலேயே முதன்முதலாகத் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகக் காரணமானவர் பல்துறை அறிஞரான பெரியசாமித் தூரன். முதுமைக் காலத்தில் நோய்ப்படுக்கையிலிருந்து அவர் கூறிய எண்ணப் பதிவுகளைக் குடும்பத்தாரிடமிருந்து பெற்றுத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் சிற்பி பாலசுப்பிரமணியம். கலைக்களஞ்சியம் உருவான கதையை மட்டுமல்ல, அதற்காக தூரன் செய்த தியாகங்களையும் சொல்கிறது இந்தத் தொகுப்பு. குடும்பச் செலவுக்குப் போதாத ஊதியத்தில்தான் கலைக்களஞ்சியத் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார் தூரன். எனினும், இருமடங்கு ஊதியத்தில் வானொலியில் […]

Read more

கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை

கவி கா.மு.ஷெரீப்பின் படைப்பாளுமை, தொகுப்பாசிரியர்: இரா.சம்பத்,சாகித்ய அகாதெமி,  பக்.225, விலை ரூ.110. கவிஞர் கா.மு.ஷெரீப் கவிதை, காவியம், சமயம், திரையிசைப் பாடல்கள், கலை, இலக்கியம், இலக்கணம், அரசியல், பத்திரிகை, தலையங்கம், உரைகள் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்; பல்துறைகளிலும் தமக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்தவர் . பத்திரிகையாளராகவும், காங்கிரஸ் கட்சி, ம.பொ.சி.யின் தமிழரசு கட்சி போன்றவற்றில் முக்கிய பங்காற்றியவராகவும், தமிழக எல்லைப் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதலிய போராட்டங்களில் பங்கேற்றவராகவும் அவர் அறியப்பட்டாலும், அவருடைய திரையிசைப் பாடல்களான ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயில […]

Read more

கடைசி நமஸ்காரம்

கடைசி நமஸ்காரம்,சந்தோஷ்குமார் கோஷ், தமிழில் புவனா நடராஜன், சாகித்ய அகாதெமி, பக்.624, விலை ரூ.415. சுயசரிதை முறையில் எழுதப்பட்டுள்ள இந்த நாவல் 1972-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது. வாழ்வின் நிறைகள், அவலங்களை தத்ரூபமாக சித்திரிக்கும் இந்தப் படைப்பு, எழுத்தாளனின் ஒற்றைச் சாளரம் வழியே வாழ்கையின் முழுப் பரிமாணத்தையும் பிரதிபலிக்கிறது. வாழ்க்கை வரலாறு என்றால் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்ச்சிகளின் தொகுப்பு மட்டும் இல்லை என்பது ஆசிரியரின் வாதம். கொஞ்சம் வேதனை, கொஞ்சம் அனுபவம், கொஞ்சம் தேடுதல், கொஞ்சம் உணர்ந்து கொள்ளுதல்,கொஞ்சம் புரிந்து […]

Read more

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில்

கண்களுக்கு அப்பால் இதயத்திற்கு அருகில், மாலன், சாகித்ய அகாதெமி, பக். 176, விலை 110ரூ. புலம்பெயர் எழுத்தாளர்கள் 14 பேர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். புலம்பெயர்வது பற்றியும் அதன் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் மாலன் எழுதிய முன்னுரை குறிப்பிடத்தக்கது. வாசகனை இந்நூல் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு இட்டுச் சென்று இனிமையான வாசிப்பனுபவத்தை ஏற்படுத்துகிறது. புதிய சூழலில் எழுதும் எழுத்தாளர்களின் கதைக்கரு, சிறுகதை கட்டமைப்பு, சொற்றொடர்கள் புதியனவாக இருக்கின்றன. ‘இரண்டு வால் கிடைத்த […]

Read more

இலக்கிய சிற்பி மீரா

இலக்கிய சிற்பி மீரா, சாகித்ய அகாதெமி, விலை 50ரூ. சாகித்திய அகாதெமியின் சார்பில் வெளிவரும் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் கவிஞர் மீரா குறித்து எழுதப்பட்ட நூல். ‘மீரா கவிதைகள்’ (மரபு கவிதை), ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ (வசன கவிதை), ‘ஊசிகள்’ (அங்கத கவிதை), ‘மூன்றும் ஆறும்’ (கவியரங்க கவிதை), ‘குக்கூ’ (குறுங்கவிதை), ‘வா இந்தப்பக்கம்’ (கட்டுரை) என்பன என்றென்றும் அவரது பெயர் சொல்லும் முத்திரை நூல்கள். கல்லூரி பேராசிரியர், முதல்வர், போராளி, இதழாசிரியர், கவிஞர், கட்டுரை ஆசிரியர், பதிப்பாளர் என்றாற்போல் […]

Read more

எனக்கு நிலா வேண்டும்

எனக்கு நிலா வேண்டும், சுரேந்திர வர்மா, தமிழில் எம்.சுசீலா, சாகித்ய அகாதெமி, பக். 960, விலை 550ரூ. குறிப்பிட்ட ஒரு துறையை மையமாகக் கொண்டு புதினம் எழுதப்படுவது புதிய விஷயமல்ல. ஹிந்தி எழுத்தாளர் சரேந்திரவர்மா, அவர் சார்ந்த நாடகத் துறையின் பலம், பலவீனங்களையும், வாழ்க்கையின் எதிர்பாராத சிக்கல்களையும், உள்ளரசியலையும், தனிமனித குணாதிசயங்களையும் முஜே சாந்த் சாஹியே என்ற இப்புதினத்தில் மிகத் தெளிவாகச் சித்திரித்திருக்கிறார். உத்திரப் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான ஷாஜான்பூரின் சுல்தான்கஞ்சில் எழை பிராமண ஆசிரியரின் மகளாகப் பிறந்த யசோதா சர்மா, தனது […]

Read more

செங்கிஸ்கான் பேரர்கள்

செங்கிஸ்கான் பேரர்கள், தாழை மதியவன், தோணித்துறை வெளியீடு, தாழையான் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் சிலரைப் பற்றிய வரலாற்றை சிறுகதையாகத் தந்துள்ளார் நூலாசிரியர். முகம்மது பின் காசிம், கியாசுதீன் பல்பன், முகம்மதுபின் துக்ளக், ஜகாங்கீர், ஷாஜகான் போன்ற மன்னர்களின் அகம் புறம் பற்றி பேசும் கதைகள். படிக்கப் படிக்க புத்துணர்ச்சி. தாஜ்மகால், குதுப்மினார், செங்கோட்டை என கோட்டைக் கொத்தளங்களைக் கட்டியவர்கள், நல்லதோர் வலுவான சமூகத்தைக் கட்ட முடியாதுபோனதைப் பற்றிய கவலை உண்டாக்கும் கதைகள். முகலாய மன்னர்களின் வரலாறு […]

Read more

மாரிஷஸ் ஹிந்திக் கதைகள்

மாரிஷஸ் ஹிந்திக் கதைகள், தொகுப்பாசிரியர் கமல் கிஷோர் கோயங்கா, தமிழில் மு. ஞானம், சாகித்ய அகாதெமி, பக். 576, விலை 330ரூ. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஈடுபடுத்த லட்சக்கணக்கானோரை இலங்கை, மொரிஷியஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு கப்பலில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றனர். அப்படி வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், துயரங்கள், சுக துக்கங்கள் பல்வேறு இலக்கிய வடிவங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொரிஷீயஸ் நாட்டில் அபிமன்யு அனத், ஜயதத் ஜீவுத், தீபந்த் பிஹாரி, தர்மவீர் கூரா, […]

Read more

கோரா

கோரா, இரவீந்திரநாத் தாகூர், தமிழில் கா. செல்லப்பன், சாகித்ய அகாதெமி, சென்னை, பக். 704, விலை 350ரூ. புதிய இலக்கிய வகையான நாவல் இந்தியாவில் அறிமுகமானபோது எழுதப்பட்ட ஆரம்பகாலப் புதினங்களுள் ரவீந்திரரின் கோராவுக்கு (1909) முக்கிய இடமுண்டு. விடுதலைப் போராட்டக் காலத்தில் உருவான பெரும்பாலான இலக்கியப் படைப்புகளைப் போலவே, ரவீந்திரரின் புதினத்திலும் சமூக அக்கறையும் தேசிய விழிப்புணர்வும் மிளிர்கின்றன. நாடு – உலகம், சாதி – மதம், ஆண் – பெண் உறவுகள், முற்போக்கு – பிற்போக்கு எனப் பலதரப்பட்ட வாழ்வின் அடிப்படை அடையாளச் […]

Read more

திரௌபதி

திரௌபதி, யார்லகட்ட லக்ஷ்மிபிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி, பக். 368, விலை 200ரூ. பாரதத்தின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் வெறும் கதையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்வையும், அப்போது நிலவிய அதிகாரப் போட்டியையும் வெளிப்படுத்தும் ஆவணம். மகாபாரதம், காலந்தோறும் புதிய வடிவில் மீள்பார்வைக்கும் மறுவாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதினமே இந்நூல். நூலாசிரியர் யார்லகட்ட லக்ஷ்மிப்ரசாத் மகாபாரக் கதையின் மைய நாயகியான திரௌபதியை ஆதார விசையாகக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார். திரௌபதியின் […]

Read more
1 2 3