மணிச்சித்திரத்தாழ்

மணிச்சித்திரத்தாழ்,  தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக்.158, விலை ரூ.150. மாறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த இரு இணையர்கள்தான் இந்நாவலின் நாயகர்கள் மற்றும் நாயகியர். அவர்களது காதல், மண வாழ்க்கை, இல்லறம் குறித்த கதை என்றாலும், அதனுள்ளே இருவேறு மதங்களைப் பற்றிய சமூகக் கட்டமைப்புகளையும், அதனால் ஏற்படும் சவால்களையும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். காதலின் ஊடே சமகால சமூகப் பிரச்னைகளை அலசும் வகையில் இந்நாவல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. பேரன்பாக ஒவ்வொருவரது ஆழ்மனதுக்குள்ளும் நிறைந்திருக்கும் காதல், பேராண்மையாக இந்த மானுடத்தை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் கருப்பொருள். அனுராதா […]

Read more

கடல் குதிரைகள்

கடல் குதிரைகள், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 240, விலை 175ரூ. மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இந்நூலாசிரியர் கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என்று பல புதினங்களைப் படைத்துள்ளார். அவற்றில் பல இஸ்லாமிய மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளும், மத நம்பிக்கைகளும் பின்னப்பட்டு, யதார்த்தத்தை வெளிப்படுத்துபவை. குறிப்பாக, உண்மை நிகழ்வுகளை வைத்தே கற்பனைக் கதைகளை உருவாக்குவது இவரது பாணி. இந்நூலிலுள்ள எட்டு நெடுங்கதைகளும் இதே பாணியில் அமைந்துள்ளது படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ‘கடல் குதிரைகள்’ என்ற முதல் கதை, கடத்தலைப் பற்றி ‘இந்தியா டுடே’யில் வெளியான […]

Read more

ஒரு வீணையின் விசும்பல்

ஒரு வீணையின் விசும்பல், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. முஸ்லிம் கதை மாந்தர்களைக் கொண்ட, சிறந்த கதைகள் அடங்கிய நூல். ‘ஐரோப்பாவின் நோயாளி’ என அழைக்கப்பட்ட துருக்கி, முதல் உலகப் போரில் மல்யுத்த வீரனாக எழுந்து நின்றதைச் சொல்லும், ‘கல்விப்போலி போர்க்களம்’ என்ற கதை, ஒரு சிறந்த சரித்திர ஆவணம். கதைக்கான கருக்கள், பெரும்பாலும் உண்மை நிகழ்வுகளில் இருந்தே எடுத்துக் கையாளப்படுகின்றன என்று, நூலாசிரியர் தன் முன்னுரை யில் கூறியுள்ளார். – எஸ்.குரு. நன்றி: தினமலர், 18/6/2016.

Read more

செங்கிஸ்கான் பேரர்கள்

செங்கிஸ்கான் பேரர்கள், தாழை மதியவன், தோணித்துறை வெளியீடு, தாழையான் பதிப்பகம், பக். 96, விலை 50ரூ. இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்களில் சிலரைப் பற்றிய வரலாற்றை சிறுகதையாகத் தந்துள்ளார் நூலாசிரியர். முகம்மது பின் காசிம், கியாசுதீன் பல்பன், முகம்மதுபின் துக்ளக், ஜகாங்கீர், ஷாஜகான் போன்ற மன்னர்களின் அகம் புறம் பற்றி பேசும் கதைகள். படிக்கப் படிக்க புத்துணர்ச்சி. தாஜ்மகால், குதுப்மினார், செங்கோட்டை என கோட்டைக் கொத்தளங்களைக் கட்டியவர்கள், நல்லதோர் வலுவான சமூகத்தைக் கட்ட முடியாதுபோனதைப் பற்றிய கவலை உண்டாக்கும் கதைகள். முகலாய மன்னர்களின் வரலாறு […]

Read more

ஒரு வீணையின் விசும்பல்

ஒரு வீணையின் விசும்பல், தாழை மதியவன், தாழையான் பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்த இந்நூலாசிரியரின் இச்சிறுகதைத் தொகுப்பு, அவருக்குப் பெரும் எழுத்தாளருக்குரிய அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளது எனலாம். இந்நூலில் அவரது 21 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமியக் குடும்பங்களின் கதைகளாக உள்ளதால், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகள், கலாசாரம், வழிபாட்டு முறைகள், இளைய தலைமுறையினரைப் பாதிக்கும் நவீனமயம்… என்று பல்வேறு கோணங்கள் இக்கதைகளில் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. இக்கதைகள் சில இஸ்லாமிய இதழ்களிலும், தூது வலைத் […]

Read more

வாங்க உலகை வெல்லலாம்

வாங்க உலகை வெல்லலாம், சி. ஹரிகிருஷ்ணன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 144, விலை 115ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-7.html வெற்றி, தோல்வி இரண்டுமே நாம் எடுக்கும் முயற்சியைப் பொறுத்ததுதான். உங்கள் மீது நம்பிக்கை வைத்துப் பாருங்கள். வெற்றியின் முதல்படி தெரியும். நீங்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி இருக்கக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டாலே நீங்கள் ஒரு வெற்றியாளர்தான். அகந்தையை விட்டொழிப்பது, மென்மையைக் கடைப்பிடிப்பது, எதிர்மறையான எண்ணங்களை மாற்றிக்கொள்வது, தன்னடக்கம், கோபத்தைக் கட்டுப்படுத்துவது, முயற்சியுடைய ஆசை, குறிக்கோள்களை அடைய […]

Read more

மனம் மகிழுங்கள்

மனம் மகிழுங்கள், நூருத்தீன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600014, பக். 196, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-154-8.html மனம் மகிழ்ச்சியாக இருக்க, என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை எளிய இனிய நடையில் நூருத்தீன் சொல்கிறார். பொதுவாக மனிதனுக்கு இருவகையான மனோ வடிவமைப்புகள் உள்ளன. அவையே அவனது குணங்களின் அடிப்படை ஆகும். ஒன்று ஆக்கப்பூர்வமானது. மற்றொன்று எதிர்மறையானது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி உயர்வாகவே கருத வேண்டும். நல்லவற்றையே சிந்திக்க வேண்டும். தம் […]

Read more