மனம் மகிழுங்கள்
மனம் மகிழுங்கள், நூருத்தீன், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 600014, பக். 196, விலை 140ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-154-8.html
மனம் மகிழ்ச்சியாக இருக்க, என்னென்ன வழிகள் இருக்கின்றன என்பதை எளிய இனிய நடையில் நூருத்தீன் சொல்கிறார். பொதுவாக மனிதனுக்கு இருவகையான மனோ வடிவமைப்புகள் உள்ளன. அவையே அவனது குணங்களின் அடிப்படை ஆகும். ஒன்று ஆக்கப்பூர்வமானது. மற்றொன்று எதிர்மறையானது. ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி உயர்வாகவே கருத வேண்டும். நல்லவற்றையே சிந்திக்க வேண்டும். தம் செயல்களை ஆக்கப்பூர்வமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மனதில் மகிழ்ச்சி எட்டிப் பார்க்கும் என்கிறார் ஆசிரியர். சுய முன்னேற்ற நூல். -எஸ். குரு.
—-
காணாத காட்சி-சிறுகதைகள், மஜீதா மைந்தன், தாழையான் பதிப்பகம், 51, அண்ணாநகர், அப்துல் ரசாக் தெரு விரிவு, சைதாப்பேட்டை, சென்னை 15, பக். 142, விலை 70ரூ.
ஆசிரியரின் பத்தொன்பது சிறுகதைகளின் தொகுப்பு. எல்லாக் கதைகளும் இஸ்லாமிய சமூகப் பின்னணியுடன் கூடியவை. -வி. பாலு.
—-
தகவல் பேழை, ச. செல்வ கீதா, சுவாதி பதிப்பகம், 1/188, சோமுகாளை இல்லம், நத்தம் மெயின் ரோடு, பாலாஜி நகர், மதுரை 625 014, பக். 103, விலை 60ரூ.
பண்பலை வானொலியில் தமிழகத்தின் தலைசிறந்த தொகுப்பாளர் என செல்வ கீதாவை 2011ம் ஆண்டு விருது வழங்கி ஆனந்தவிடகன் இதழ் கவுரவித்தள்ளது. மஞ்சள் மகிமை, மதுரா, விரல் நகம் தேடும் மருதாணி, சிதம்பரம் நடராஜர் கோவில் என்றெல்லாம் 102 தலைப்புகளில் மினி தகவல்கள். தகவல் பொக்கிஷம். -எஸ். குரு. நன்றி; தினமலர், 22/12/13.