திரௌபதி

திரௌபதி, யார்லகட்ட லக்ஷ்மிபிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி, பக். 368, விலை 200ரூ. பாரதத்தின் மாபெரும் இதிகாசமான மகாபாரதம் வெறும் கதையல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த மண்ணில் வாழ்ந்த மக்களின் சமூக வாழ்வையும், அப்போது நிலவிய அதிகாரப் போட்டியையும் வெளிப்படுத்தும் ஆவணம். மகாபாரதம், காலந்தோறும் புதிய வடிவில் மீள்பார்வைக்கும் மறுவாசிப்புக்கும் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வெளியாகியுள்ள புதினமே இந்நூல். நூலாசிரியர் யார்லகட்ட லக்ஷ்மிப்ரசாத் மகாபாரக் கதையின் மைய நாயகியான திரௌபதியை ஆதார விசையாகக் கொண்டு இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார். திரௌபதியின் […]

Read more

திரவ்பதி

திரவ்பதி, லட்சுமி பிரசாத், தமிழில் இளம்பாரதி, சாகித்ய அகாதெமி,  சென்னை, விலை 200ரூ. இந்திய மொழிகளின் ஆதார நாவல் இலக்கியமான மகாபாரதம், மீள்பார்வையாக இங்கு பெண்ணிய நோக்கில் விவரிக்கப்பட்டிருக்கிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான மகாபாரத கதைமாந்தர்கள், புதிய கோணத்தில் விமர்சிக்கப்படுகிறார்கள். ஒரு பெண் மையமாக இருந்து, மகாபாரத கதையை இயக்கி நடத்துவதாக அமைந்த இலக்கியப்போக்கு எல்லாருடைய கவனத்தையும் ஈர்க்கவல்லது. 2010ம் ஆண்டு சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற இந்தத் தெலுங்கு நாவலில், லட்சுமி பிரசாத் கையாண்டிருக்கும் கதை சொல்லும் முறையும், வர்ணனைகளின் துணைக்களமும் வாசகர்களை மிகவும் […]

Read more

காலச்சுவடுகள்

காலச்சுவடுகள் – தெலுங்கு மூலம், நவீன், தமிழில் – இளம்பாரதி, சாகித்திய அகாதெமி, குணா பில்டிங், 443 அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18. பக். 1045, விலை 545ரூ. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு காஸ்ரீஸ்ரீ த.நா.குமாரசாமி, சுந்தர ராமசாமி ஆகியோர் மொழிபெயர்த்த நாவல்களைப் போன்ற அதே மொழிபெயர்ப்பை இந்த தெலுங்கு நாவலில் காண முடிகிறது. கதை மாந்தர்களின் உரையாடல் அனைத்தும் பேச்சு வழக்கில் மிக எளிமையாக நம் கிராமத்துக் கதை போலவே இருக்கிறது. மொழிபெயர்ப்பு என்ற உணர்வே தோன்றுவதில்லை. வாரங்கல் அடுத்த ஒரு சிறு […]

Read more