இலக்கிய சிற்பி மீரா
இலக்கிய சிற்பி மீரா, சாகித்ய அகாதெமி, விலை 50ரூ.
சாகித்திய அகாதெமியின் சார்பில் வெளிவரும் ‘இந்திய இலக்கிய சிற்பிகள்’ வரிசையில் கவிஞர் மீரா குறித்து எழுதப்பட்ட நூல். ‘மீரா கவிதைகள்’ (மரபு கவிதை), ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ (வசன கவிதை), ‘ஊசிகள்’ (அங்கத கவிதை), ‘மூன்றும் ஆறும்’ (கவியரங்க கவிதை), ‘குக்கூ’ (குறுங்கவிதை), ‘வா இந்தப்பக்கம்’ (கட்டுரை) என்பன என்றென்றும் அவரது பெயர் சொல்லும் முத்திரை நூல்கள். கல்லூரி பேராசிரியர், முதல்வர், போராளி, இதழாசிரியர், கவிஞர், கட்டுரை ஆசிரியர், பதிப்பாளர் என்றாற்போல் பல்வேறு பரிமாணங்கள் படைத்தது மீராவின் ஆளுமை. ‘மரபில் பூத்த புதுமலர்’ என்றும், ‘பாவேந்தர் பாரதிதாசனின் வாரிசு’ என்றும் தமிழ் கூறும் நல்லுலகில் அடையாளம் காணப்பெற்றுள்ள மீராவின் பன்முகத் திறன்களையும் அறிமுகம் செய்யும் நோக்கில் எழுதியுள்ளார் முனைவர் இரா. மோகன். நன்றி: தினத்தந்தி, 16/12/2015
—-
சித்திரச் சிலம்பின் சிதறிய பரல்கள், மணிமேகலை புஷ்பராஜ், பாவேந்தன் நினைவு அறக்கட்டளை, விலை 150ரூ.
சிலப்பதிகாரப் பெருவிழாவில் கலந்து கொண்டவர்களின் பேச்சுகள், நகைச்சுவைத் துணுக்குகள் மற்றும் வண்ணப் புகைப்படங்கள் அடங்கிய இந்த நூல், படிப்பதற்கு பல்வேறு சுவையான கருத்துக்களை கொண்டிருப்பதுடன், இலக்கிய பெட்டகமாக விளங்குகிறது. நன்றி: தினத்தந்தி, 16/12/2015