பிராப்பர்ட்டி ரெஜிஸ்ட்ரேஷன்
பிராப்பர்ட்டி ரெஜிஸ்ட்ரேஷன், லேண்டு ரெக்கார்ட்ஸ் அண்டு பில்டிங் அப்ரூவல் புரசீஜர்ஸ் பாலோடு இன்வேரியஸ் ஸ்டேட்டஸ் இன் இண்டியா (ஆங்கிலம்), வழக்கறிஞர் ஜி. ஷியாம் சுந்தர், ஸ்ரீ வித்யாதேவி பப்ளிஷர்ஸ், பக். 341, விலை 499ரூ.
பத்திரப் பதிவு பற்றிய தெளிவான நூல் நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் பத்திரப்பதிவு நடைமுறைகள், முத்திரைத் தீர்வை, கட்டணம் குறித்த விவரங்கள், எளிதான மொழிநடையில், இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன. சென்னையை விட நெருக்கடியான டில்லி, மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் அதிகபட்ச அளவில், கட்டடங்களுக்கான எப்.எஸ்.ஐ., எனப்படும், தளபரப்பு குறியீடு வழங்கப்படுகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில், ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வழங்கும் கட்டட அனுமதி விவரங்களை, இணையதளங்களில் மக்களே சரிபார்த்துக்கொள்ள முடியும். மஹாராஷ்டிராவில் பிரத்யேக இணையதள சேவையில், பொதுமக்கள் தேவையான பத்திரங்களின் நகல் பிரதிகளை, எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளன. சொத்து பரிமாற்றத்தில் ஈடுபடும் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டும் ஆவணம் இந்த நூல். -வி. கிருஷ்ணமூர்த்தி. நன்றி: தினமலர், 31/1/2016.