கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம், முத்துலிங்கம், விகடன் பிரசுரம், விலை 155ரூ.

உலக அகதிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 5 கோடியை எட்டியிருக்கிறது. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் அகதிகள். அவர்களுக்கு இன்னொரு நாடு சுலபத்தில் கிடைப்பதில்லை. சிலர் பாதி வழியில் பிடிபட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். சிலர் சிறையில் அடைக்கப்படுவார்கள். சிலர் காடுகளிலோ, கடலிலோ, பனியிலோ, ஆற்றிலோ அகப்பட்டு இறந்துவிடுவார்கள். இந்த நூல் அகதிகள் அலைவதை சொல்கிறது. சரித்திரம் நிலைப்பது புனைவுகளின் மூலம்தான். அகதிகள் பயணத்தை பதிவு செய்யும் இந்த புதினம் ஒரு வரலாற்றை உலகத் தரத்தோடு எழுதியிருக்கிறது. இலங்கையில் இருந்து புறப்பட்ட 19 வயது நிஷாந், உயிரைக் காக்கும் பயணத்தில் உயிரையே பணயம் வைக்கும் தருணங்கள் பதற வைக்கின்றன. பாகிஸ்தான்… உக்ரைன், ரஷியா, துருக்கி, ஜெர்மன், பிரான்ஸ், லண்டன், ஈகுவடார், கனடா என எத்தனை நாடுகளை நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை கெடுபிடி, எத்தனை போலீஸ், எத்தனை காயம், எத்தனை குளிர்… குடியுரிமை வாங்கி ஒரு நாட்டில் தம்மை ஒப்புக் கொடுக்கிற வரை காலூன்ற இடமில்லாமல் தேசம் விட்டு தேசம் ஊசலாடும் இந்த மனிதப் பறவைகளின் அவலம் ஒவ்வொரு வரியிலும் உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. “கடவுள் தொடங்கிய இடத்தை கண்டடைய படியுங்கள்… விறுவிறுப்பான அனுபவம் காத்திருக்கிறது” என்கிறார் ஈழத்து எழுத்தாளர் முத்துலிங்கம். நன்றி: தினத்தந்தி, 23/12/2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *