வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும், செ. திவான், சுஹைனா பதிப்பகம்,  பக்.216, விலை 200ரூ. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் காலூன்றி தம் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியபோது அதை எதிர்த்து, தனி நபராகவோ, கூட்டாகவோ வன்முறை வழியில் போராட்டங்கள் நடத்தி, தியாகங்கள் பல புரிந்து தம் இன்னுயிரைத் துறந்தவர்கள் ஏராளம். அவர்களில் பலரையும், அவர்கள் நிகழ்த்திய போராட்டங்களையும் இந்நூல் வாயிலாக அறிய முடிகிறது. மக்களின் மன எழுச்சியினாலும், வரலாற்றின் மறுமலர்ச்சியாலும் புரட்சி இயக்கங்கள் பல தோன்றி வளரத் தொடங்கின. குறிப்பாக சாபேகர் சகோதரர்களிடம் காணப்பட்ட ஆர்வமும் […]

Read more

நாகூர் இ.எம்.ஹனீபா

நாகூர் இ.எம்.ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ. செ. திவான் பாளையங்கோட்டைவாசி. படிப்பு, எழுத்து, மறுமலர்ச்சி எனத் தம் வாழ்நாளைக் கழித்துக் கெண்டிருப்பவர், அடுத்த தனது 100வது நூலை மலபார் மாப்பிள்ளை புரட்சி – 1921 என்ற பெயரில் அதுவும் 1000 பக்கங்களில் வெளியிட இருக்கிறார். சுஹைனா பதிப்பகம் இவரது சொந்தப் பதிப்பகம் திவானுக்கு ‘தி’வானே எல்லை. ஹனீபா இசை முரசு அல்ஹாஜ். இரவது பாடல்கள் ‘ஹனி’போல் மென்மையன்று, முரசுபோல் ஆரவாரமுடையது. திராவிடமும் தெய்வீகமும்(தீன்) இவரது இரண்டு கண்கள். பொருந்தவில்லையே என்று […]

Read more

இசை முரசு நாகூர் ஹனீபா

இசை முரசு நாகூர் ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ. ஆரம்ப காலத்தில் இருந்து, தி.மு.கழகத்தில் விசுவாசத்துடன் பணியாற்றியவர். “இசை முரசு” நாகூர் அனீபா. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடனும், மற்ற தலைவர்களுடனும் நெருங்கிப்பழகியவர். திரைப்படங்களில் பாடி புகழ் பெற்றவர். தி.மு.கழக மாநாடுகளில் அவரது இசை நிகழ்ச்சி தவறாது இடம் பெறும். நாகூர் ஹனீபாவின் வாழ்க்கை வரலாற்றை, வரலாற்று ஆசிரியர் செ. திவான் பெரு நூலாக எழுதியுள்ளார். இதைப் படிப்பதன் மலம் நாகூர் ஹனீபாவின் வரலாற்றை மட்டுமல்ல, […]

Read more

இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும்

இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும், சுஹைனா பதிப்பகம், விலை 100ரூ. இது சிறந்த ஆராய்ச்சி நூல். வடலூரில் வாழ்ந்த சமுதாய சீர்திருத்தவாதியான ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்கள், “திருவருட்பா” என்று அழைக்கப்படுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் “அப்பாடல்கள் அருட்பா அல்ல, மருட்பா” என்று வாதிட்டார். வள்ளலாரும், ஆறுமுக நாவலரும் மறைந்த பின்னர், ‘அருட்பா, மருட்பாவா?’ என்ற சர்ச்சை மீண்டும் மூண்டது. அப்போது ‘வள்ளலார் பாடியவை அருட்பாதான்’ என்று வாதாடியவர் செய்குத்தம்பி பாவலர். வள்ளலார் பற்றியும், பாவலர் பற்றியும் முழு விவரங்களும் இதில் […]

Read more

கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம், முத்துலிங்கம், விகடன் பிரசுரம், விலை 155ரூ. உலக அகதிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 5 கோடியை எட்டியிருக்கிறது. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் அகதிகள். அவர்களுக்கு இன்னொரு நாடு சுலபத்தில் கிடைப்பதில்லை. சிலர் பாதி வழியில் பிடிபட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். சிலர் சிறையில் அடைக்கப்படுவார்கள். சிலர் காடுகளிலோ, கடலிலோ, பனியிலோ, ஆற்றிலோ அகப்பட்டு இறந்துவிடுவார்கள். இந்த நூல் அகதிகள் அலைவதை சொல்கிறது. சரித்திரம் நிலைப்பது புனைவுகளின் மூலம்தான். அகதிகள் பயணத்தை பதிவு செய்யும் இந்த புதினம் ஒரு வரலாற்றை உலகத் தரத்தோடு […]

Read more

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்

வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும், சுஹைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, விலை 200ரூ. சுதந்திரப் போராட்டத்தின்போது, மணியாச்சி ஜங்ஷனில் கலெக்டர் ஆஷ் துரையை வீரவாஞ்சி சுட்டுக்கொன்ற சம்பவம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். ஆஷ் துரை செய்த அட்டூழியங்கள், அவரை கொலை செய்ய வாஞ்சி வகுத்த திட்டங்கள் முதலியவற்றை, ஆசிரியர் செ. திவான் சிரமப்பட்டு சேகரித்துள்ளார். ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை, தன் எழுத்து வன்மையால் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆஷ் துரையை சுட்டுக்கொன்றபின், வாஞ்சி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். எனினும் கொலைக்கு […]

Read more