இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும்

இராமலிங்க வள்ளலாரும் செய்குத்தம்பி பாவலரும், சுஹைனா பதிப்பகம், விலை 100ரூ. இது சிறந்த ஆராய்ச்சி நூல். வடலூரில் வாழ்ந்த சமுதாய சீர்திருத்தவாதியான ராமலிங்க சுவாமிகள் பாடிய பாடல்கள், “திருவருட்பா” என்று அழைக்கப்படுகின்றன. அக்காலத்தில் வாழ்ந்த இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் “அப்பாடல்கள் அருட்பா அல்ல, மருட்பா” என்று வாதிட்டார். வள்ளலாரும், ஆறுமுக நாவலரும் மறைந்த பின்னர், ‘அருட்பா, மருட்பாவா?’ என்ற சர்ச்சை மீண்டும் மூண்டது. அப்போது ‘வள்ளலார் பாடியவை அருட்பாதான்’ என்று வாதாடியவர் செய்குத்தம்பி பாவலர். வள்ளலார் பற்றியும், பாவலர் பற்றியும் முழு விவரங்களும் இதில் […]

Read more

கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம், முத்துலிங்கம், விகடன் பிரசுரம், விலை 155ரூ. உலக அகதிகளின் எண்ணிக்கை முதல் முறையாக 5 கோடியை எட்டியிருக்கிறது. நாட்டை விட்டு துரத்தப்பட்டவர்கள் அகதிகள். அவர்களுக்கு இன்னொரு நாடு சுலபத்தில் கிடைப்பதில்லை. சிலர் பாதி வழியில் பிடிபட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். சிலர் சிறையில் அடைக்கப்படுவார்கள். சிலர் காடுகளிலோ, கடலிலோ, பனியிலோ, ஆற்றிலோ அகப்பட்டு இறந்துவிடுவார்கள். இந்த நூல் அகதிகள் அலைவதை சொல்கிறது. சரித்திரம் நிலைப்பது புனைவுகளின் மூலம்தான். அகதிகள் பயணத்தை பதிவு செய்யும் இந்த புதினம் ஒரு வரலாற்றை உலகத் தரத்தோடு […]

Read more