இசை முரசு நாகூர் ஹனீபா

இசை முரசு நாகூர் ஹனீபா, செ. திவான், சுஹைனா பதிப்பகம், விலை 350ரூ.

ஆரம்ப காலத்தில் இருந்து, தி.மு.கழகத்தில் விசுவாசத்துடன் பணியாற்றியவர். “இசை முரசு” நாகூர் அனீபா. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோருடனும், மற்ற தலைவர்களுடனும் நெருங்கிப்பழகியவர். திரைப்படங்களில் பாடி புகழ் பெற்றவர். தி.மு.கழக மாநாடுகளில் அவரது இசை நிகழ்ச்சி தவறாது இடம் பெறும். நாகூர் ஹனீபாவின் வாழ்க்கை வரலாற்றை, வரலாற்று ஆசிரியர் செ. திவான் பெரு நூலாக எழுதியுள்ளார். இதைப் படிப்பதன் மலம் நாகூர் ஹனீபாவின் வரலாற்றை மட்டுமல்ல, தி.மு.கழக வரலாற்றையும் அறிய முடிகிறது. சிறந்த முறையில் நூலை எழுதியுள்ள திவான், பாராட்டுக்கு உரியவர். அரிய படங்களும் இடம் பெற்று இருப்பது, புத்தகத்துக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.

நன்றி:தினத்தந்தி, 20/4/2016.

 

—-

தெரியும் ஆனால் தெரியாது, முனைவர் பி. அப்புராஜ், தண்மதி பதிப்பகம், விலை 120ரூ.

அப்துல் கலாம் சைவ உணவு மட்டும் சாப்பிடுவார், இந்தியாவின் தலைநகரமாக டெல்லி ஆனது 1912-ம் ஆண்டில் காந்தியின் உருவம் பொறித்த தகபால் தலைகளை 120 நாடுகள் வெளியிட்டுள்ளன… இப்படிப்பட்ட அபூர்வ தகவல்கள் கொண்ட புத்தகம் இது.

நன்றி:தினத்தந்தி, 20/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *