பாட்டுடைத் தலைவி

பாட்டுடைத் தலைவி, லட்சமி ராஜரத்தினம், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ.

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான லட்சுமி ராஜரத்தினத்தின் கற்பனையில் விளைந்த கருத்தோவியம்தான் இப்“பாட்டுடைத்தலைவி” என்ற நெடுங்கதை. அமுத மலர் பத்திரிகையின் துணை ஆசிரியர் ரவி என்னும் ரவிச்சந்திரன், இக்கதையின் நாயகன். “பாட்டுடைத் தலைவி”யாம் நிர்மலா கதையின் நாயகி. ஆனால் ரவியின் மனைவியாகவில்லை. “மனத்தாலே வாழ்ந்து விடச்” செய்யும் தியாக வாழ்வு பாத்திரமாகையால் அனைவர் மனத்திலும் ஜீவ ராகமாக ஒலிக்கிறாள்.

ராதா, ரவியின் மனைவியாகிறாள். ரவிக்கு நேர்மாறான குணம் படைத்தவளான ராதா அதிகம் முரண்டு பிடித்து அவனை, ஏன் வாசகர்களைத் தான் ஆட்டி படைக்கிறாள். முடிவில் ராதா குணம் திருந்தும் வரையில் ரவி படும் அவஸ்தைகள் நம்மையும் பட வைக்கின்றன.

வாழ்க்கையில் சில முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அதைச் சகித்துக் கொண்டும், விட்டுக் கொடுத்தும் வாழ்ந்தால் என்னும் மகிழ்ச்சிதான் என்பதை வலியுறுத்துகிறார் நாவலாசிரியை லட்சுமி ராஜரத்தினம்.

நன்றி: தினத்தந்தி, 20/4/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *