பாட்டுடைத் தலைவி

பாட்டுடைத் தலைவி, லட்சமி ராஜரத்தினம், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 160ரூ. தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான லட்சுமி ராஜரத்தினத்தின் கற்பனையில் விளைந்த கருத்தோவியம்தான் இப்“பாட்டுடைத்தலைவி” என்ற நெடுங்கதை. அமுத மலர் பத்திரிகையின் துணை ஆசிரியர் ரவி என்னும் ரவிச்சந்திரன், இக்கதையின் நாயகன். “பாட்டுடைத் தலைவி”யாம் நிர்மலா கதையின் நாயகி. ஆனால் ரவியின் மனைவியாகவில்லை. “மனத்தாலே வாழ்ந்து விடச்” செய்யும் தியாக வாழ்வு பாத்திரமாகையால் அனைவர் மனத்திலும் ஜீவ ராகமாக ஒலிக்கிறாள். ராதா, ரவியின் மனைவியாகிறாள். ரவிக்கு நேர்மாறான குணம் படைத்தவளான ராதா அதிகம் முரண்டு […]

Read more