இஸ்லாமிய சட்டக் கருவூலம்
இஸ்லாமிய சட்டக் கருவூலம், தமிழில் மவுலவி நூஹ், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 150ரூ.
இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் எழுதிய நூல் ‘பிக்ஹுஸ் சுன்னா.’ இதைத் தமிழில் மவுலவி நூஹ் மஹ்லரி மொழிபெயர்த்துள்ளார். இது ஏழாவது பாகமாகும். இந்த நூலில் மண விலக்கு குறித்த அனைத்து செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மணவிலக்கு (தலாக்), மணவிலக்கின் முறை, குழந்தை பராமரிப்பு, பராமரிப்பதற்கான நிபந்தனைகள் போன்ற அனைத்து சட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்து தமிழ் முஸ்லிம்களிடம் சென்று சேர வேண்டும். அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லப்பட வேண்டும் என்பது இந்த நூலின் நோக்கம். எளிய மொழிபெயர்ப்பின் மூலம் அது நிறைவேறி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
நன்றி: தினத்தந்தி, 20/4/2016.
—-
புனித தோமையார், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், விலை 120ரூ.
சென்னை சாந்தோம் பேராலயத்தை நிறுவிய புனிததோமையார். இவர், இந்தியாவில் முதன் முதலாக கிறிஸ்தவ மதத்தைத் தோன்றச் செய்தவர். இவரைப் பற்றிய வரலாற்றை விரிவாக இந்த நூல் விளக்குகிறது.
நன்றி: தினத்தந்தி, 20/4/2016.