ஆ. மாதவன் இலக்கியத் தடம்
ஆ. மாதவன் இலக்கியத் தடம், தொகுப்பாசிரியர் நெல்லை சு. முத்து, அருள் பதிப்பகம், விலை 200ரூ.
படாடோபம், பந்தாக்கள் ஏதுமின்றி, அமைதியும், எளிமையுமான வெளிப்படையான பேச்சும், எந்தத் துறையிலும், சபையிலும் தன்னை வலியப் புகுத்திக்கொள்ளாத தன்னடக்கமும் மிக்கவர் முதுபெரும் எழுத்தாளர் ஆ. மாதவன். அவரின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் ஆகியவை தொடர்பாக அவ்வப்போது அவரது சக எழுத்தாளர்கள், அறிஞர்கள், அறிவார்ந்த வாசகர்கள் அனுப்பிய கருத்தாக்கங்களும், விவாதங்களும் பல்வேறு தளங்களில் பதிவாகியுள்ளன. அத்தகைய இலக்கியப் பதிவுகளை செம்மையுறத் தொகுத்தளித்துள்ளார் விஞ்ஞானியும், எழுத்தாளருமான நெல்லை சு. முத்து.
நன்றி: தினத்தந்தி, 20/4/2016.
—-
சிவசூத்திரம், இராம. கனகசுப்புரத்தினம், கவனகர் முழக்கம், விலை 100ரூ.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கால பைரவராகவும், கால பைரவியாகவும் அவதரித்த அம்மையப்பன் அருளிய 112 சிவசூத்திர நுட்பங்களுக்கும், அவ்வையார் அருளிய 310 அவ்வைக்குறளுக்கும் நூலாசிரியர் எளிய நடையில் விளக்கம் அளித்துள்ளார்.
நன்றி: தினத்தந்தி, 20/4/2016.