தமிழக மாவட்டங்கள்

தமிழக மாவட்டங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், விலைரூ.200 தமிழகத்தில், 36 மாவட்டங்கள் குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பரப்பளவு, மக்கள்தொகை, லோக்சபா, சட்டசபை தொகுதிகள், வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சி நகராட்சிகள் என, அனைத்து விபரங்களும் அமைந்துள்ளன.கடந்த, 1956ல், 13 மாவட்டங்களாக இருந்த தமிழகம், 1966 முதல் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. புதிய மாவட்டங்கள் எந்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன என்ற தெளிவான விபரங்களும் உள்ளன. ‘சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ்’ என துவக்கத்தில் இருந்தது, பின் ஆகஸ்ட் 15, 1862 முதல், […]

Read more

மாமன்னன் ராஜராஜன்

மாமன்னன் ராஜராஜன், குன்றில் குமார், அழகு பதிப்பகம், விலைரூ.170. இன்று தமிழர் வாழ்வின் பண்டைய பெருமைகள் உலகளாவி பரவி இருப்பதற்கு ஆணிவேராக நின்று காத்தவர்கள் சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்கள் எனலாம். சோழ நாடானது வேள் மண்டலம், வேள் தேசம், நாக மண்டலம், பொன்னி மண்டலம், காவிரி நாடு, கிள்ளி மண்டலம் வளவன் மண்டலம் என்று பல்வேறு பெயர்களோடு அமைந்து ஊர்களின் பெயர்கள், ‘கோட்டை’ என்று கொண்டதாக இருந்தது சோழநாடு. வையை நாடு, பாண்டி மண்டலம் என்பதாக பாண்டியநாடு அமைந்து ஊர்களின் பெயர்கள் […]

Read more

இல்லுமினாட்டி

இல்லுமினாட்டி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், பக்.160, விலை 150ரூ. உலகம் முழுவதையும் ஒரே ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் எனும் ஒற்றை லட்சியத்தின் கீழ், 1776ம் ஆண்டு துவங்கப்பட்டு, உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களால் ரகசியமாகச் செயல்படுத்தப்படுவதாகக் கருதப்படும், ‘இல்லுமினாட்டி’ அமைப்பு பற்றிய விரிவான நுால். இல்லுமினாட்டி என்றால், ‘தெளிவூட்டுபவர்’ எனும் பொருள். உலக வங்கி மற்றும் ராணுவத் தலைமையகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், உலகின் மக்கள் தொகையைக் குறைப்பதும், பஞ்சம், பட்டினி, வறுமை, யுத்தம், வியாதிகள் மூலமாக பேரழிவுகளை ஏற்படுத்துவது […]

Read more

சேரன் செங்குட்டுவன்

சேரன் செங்குட்டுவன், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, விலை 165ரூ. கற்புக்கரசி, கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலை வரை சென்று அங்கு இருந்து கல் எடுத்து வந்த சேர மன்னர் செங்குட்டுவன் பற்றிய முழு தகவல்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது. இமயமலையில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்லை, போரில தோற்கடித்த கனகவிஜயன் தலையில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுவதில், கனகவிஜயன் என்பது ஒரு மன்னர்தான், இருவர் அல்ல என்ற தகவலும் இந்த நூலில் காணப்படுகிறது. வரலாற்றுச் செய்திகளை நாவல் போல எழுதி இருப்பதால் படிக்க சுவாரசியமாக […]

Read more

நவீன சூரிய மின்சக்தி

நவீன சூரிய மின்சக்தி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், விலை 100ரூ. தண்ணீர், நிலக்கரி, அணுசக்தி ஆகியவற்றால் மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் மாற்று முறையாக சூரிய மின் சக்தி கண்டுபிடிக்கப்பட்டது பெரிய வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. சூரிய மின்சக்தி என்றால் என்ன, அவை எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது, வீடு மற்றும் விவசாயத்துக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்வது எப்படி என்ற பயனுள்ள அனைத்து தகவல்களையும் ஆசிரியர் தந்து இருக்கிறார். சூரியமின் சக்தி பற்றி தெரிந்து கொள்வதற்கு நல்ல கையேடாக இந்தப் புத்தகம் விளங்குகிறது. நன்றி: […]

Read more

யுவான்சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப் பயணம்

யுவான்சுவாங் புத்தரைத் தேடி ஒரு புனிதப் பயணம், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 160ரூ. சீனாவிலுள்ள புத்தமத நூல்கள் பலவற்றிலுமுள்ள முரண்பாடுகளைக் கண்டு, புத்தர் அவதரித்த இந்தியாவிற்கே சென்று உண்மை நிலையை அறிய விரும்பி, கி.பி.629-ல் பயணத்தை மேற்கொண்டவர் சீனத் துறவி யுவான் சுவாங். 20 வயதிலேயே தனது நாட்டை விட்டு வெளியேறி, காடுகள், மலைகள், பாலைவனம், சீதோஷ்ணம், காட்டு விலங்குகள், கெள்ளையர் கூட்டம்… என்று பல இடர்களையும், தடைகளையும் கடந்து கால்நடையாகவே இந்தியாவிற்குள் வந்தார். பாடலிபுத்திரத்திலுள்ள நாளந்தா பல்கலைக் […]

Read more

விடை தெரிந்த மர்மங்கள்,

விடை தெரிந்த மர்மங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், விலை 160ரூ. தோன்றி நாள் முதல் எத்தனை எத்தனையோ மர்மங்களைத் தனக்குள் புதைத்துக் கொண்டு சுன்று கொண்டிருக்கிறது இந்த உலகம். மறைந்து கிடக்கும் இந்த மர்மங்கள் பலவற்றுக்கான விடையை தேடிக்கொண்டே இருக்கிறார்கள் விஞ்ஞானிகள். அவற்றுள் விடை தெரிந்தவற்றின் தொகுப்பு. படிக்கப் படிக்க, மர்மக் கதையைப் படிப்பது போன்ற சுவாரஸ்யம் எட்டிப்பார்க்கிறது. -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

விடை தெரியாத மர்மங்கள்

விடை தெரியாத மர்மங்கள், குன்றில் குமார், குறிஞ்சி, விலை 110ரூ. இப்படிக்கூட நடக்குமா? இதையெல்லாம் யார் செய்கிறார்கள்? இவையெல்லாம் உண்மையா? வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா? இந்த மாதிரி விடைதெரியாத ஆச்சரியமூட்டும், திகிலான, நம்பவே முடியாத அதேசமயம் நிஜமாகவே நடந்த நிகழ்சிகள் இந்த உலகில் எத்தனை எத்தனையோ உண்டு. அவற்றில் சில அரிய நிகழ்வுகளின் தொகுப்பு. நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

செயின்ட் ஜார்ஜ் கோட்டை, குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், பக். 184, விலை 175ரூ. சென்னை மாநகரின் முக்கிய அடையாளம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை. 1640ம் ஆண்டு, வர்த்தக நோக்கில் இந்தியா வந்த கிழக்கிந்திய கம்பெனியார் தங்கள் பாதுகாப்புக்காக கட்டிய கோட்டை இது.இன்று, தமிழக அரசு நிர்வாகம் செய்யும் முக்கிய கோட்டையாகவும் விளங்குகிறது.  அத்துடன், இந்திய ராணுவக் குடியிருப்பு மற்றும் இந்திய கடற்படை ஆகியவையும் இங்கு தான் அமைந்துள்ளன. பிரஞ்சுப் படையினர் இரு முறை ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டு, இக்கோட்டையைக் கைப்பற்றிய வரலாறும் இருக்கிறது! நானுாறு […]

Read more

ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்)

ஜல்லிக்கட்டு (பாழ்படும் பாரம்பரியங்கள்), குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 176, விலை 165ரூ. தமிழர்களின் பாரம்பரியமாகக் கருதப்படுகிறது ஜல்லிக்கட்டு. சங்க காலம் முதல் வழி வழியாக ‘ஏர் தழுவல்’ என்னும் மாட்டை அடக்கும் போட்டி தமிழர்களின் அடையாளமாக இருக்கிறது. ஜல்லிக்கட்டு என்பது காளையோடு மல்யுத்தம் என்பதாகப் பலர் பார்க்கின்றனர். அது தவறு. மாறாக, காளையோடு ஓர் உற்சாக விளையாட்டு என்பதே நிஜம். உழவுத் தொழிலுக்கு அடிப்படை காளை மாடுகள். அத்தகைய காளைகளைப் போற்றி அவற்றோடு விளையாடி மகிழும் உன்னத் திருநாள் தான் ஜல்லிக்கட்டு. […]

Read more
1 2 3