வேத வரிகளும் தூதர் மொழிகளும்

  வேத வரிகளும் தூதர் மொழிகளும், டாக்டர் கே.வி.எஸ். ஹவீப் முகம்மத், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 200ரூ. திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் ‘ஹதீஸ்’ எனப்படும். நபிகளாரின் பொன்மொழிகளும்,திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட நன்னெறிக் கருத்துகளும் சில ஆயிரம் பக்கங்கள் கொண்டவை. அத்தகைய இஸ்லாமிய கருத்துகளை அனைவரும் அறிந்திடும் வகையில் சுருக்கமாக டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார். முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித் தனித்தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவு ஆற்றுவோருக்கும், […]

Read more

இஸ்லாமிய சட்டக் கருவூலம்

இஸ்லாமிய சட்டக் கருவூலம், தமிழில் மவுலவி நூஹ், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 150ரூ. இஸ்லாமிய சட்டங்கள் குறித்து அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக் எழுதிய நூல் ‘பிக்ஹுஸ் சுன்னா.’ இதைத் தமிழில் மவுலவி நூஹ் மஹ்லரி மொழிபெயர்த்துள்ளார். இது ஏழாவது பாகமாகும். இந்த நூலில் மண விலக்கு குறித்த அனைத்து செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மணவிலக்கு (தலாக்), மணவிலக்கின் முறை, குழந்தை பராமரிப்பு, பராமரிப்பதற்கான நிபந்தனைகள் போன்ற அனைத்து சட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய சட்டங்கள் அனைத்து தமிழ் முஸ்லிம்களிடம் சென்று சேர வேண்டும். அவர்களுக்குப் […]

Read more

திருக்குர்ஆன் விளக்கவுரை

திருக்குர்ஆன் விளக்கவுரை, இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், சென்னை, விலை 130ரூ. திருக்குர்ஆனுக்கு மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ரஹ்) எழுதிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. இதை இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே அல் பாத்திஹா, அல் கஹ்பு ஆகிய இரு அத்தியாயங்களையும், அதைத் தொடர்ந்து மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்களையும், இதன் பின்னர் அல் அராப் என்ற அத்தியாயத்தையும் வெளியிட்டது. இப்போது இந்த நூல் அல்அன்பால், அத்தவ்பா ஆகிய அத்தியாயங்களுக்கான விளக்கவுரையை தமிழில் மவுலவி எம்.ஐ. […]

Read more

அறவாணரின் படைப்பிலக்கியங்கள்

அறவாணரின் படைப்பிலக்கியங்கள், தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், தலைசிறந்த ஆய்வறிஞர், மொழிபெயர்ப்பாளர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர் க.ப. அறவாணன். கலையும், இலக்கியமும் வாழ்க்கைக்காக என்னும் கருத்துடைய அறவாணரின் சிறுகதை மற்றும் நாவல்களை ஆராய்ந்து வீர. ஆதிபராசக்தி இந்த நூலைப் படைத்துள்ளார். அறன், அன்பு, ஒழுக்கம், நேர்மை, கடமை தவறாமை போன்றவை அவரது படைப்புகளில் பரிணமிக்கின்றன. படைப்பிலக்கியங்களில் மனித சமுதாயத்தை முன்னேற்றிச் செல்ல வேண்டும் என்பதற்கு அவரது சிறுகதைகளும், நாவல்களும் முன்னோடிகளாக அமைந்துள்ளன என்பதை இலக்கிய தராசில் நூலாசிரியர் […]

Read more