திருக்குர்ஆன் விளக்கவுரை
திருக்குர்ஆன் விளக்கவுரை, இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், சென்னை, விலை 130ரூ.
திருக்குர்ஆனுக்கு மவுலானா சையத் அபுல் அக்லா மவுதூதி (ரஹ்) எழுதிய உரை மிகவும் பிரசித்தி பெற்றது. இதை இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே அல் பாத்திஹா, அல் கஹ்பு ஆகிய இரு அத்தியாயங்களையும், அதைத் தொடர்ந்து மர்யம், தாஹா ஆகிய அத்தியாயங்களையும், இதன் பின்னர் அல் அராப் என்ற அத்தியாயத்தையும் வெளியிட்டது. இப்போது இந்த நூல் அல்அன்பால், அத்தவ்பா ஆகிய அத்தியாயங்களுக்கான விளக்கவுரையை தமிழில் மவுலவி எம்.ஐ. முகம்மத் சித்தீக் மொழிபெயர்த்துள்ளார். விரிவான விளக்கவுரை. முஸ்லிம்களின் இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய நூல். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.
—-
தேனியில் நியூட்ரினோ நோக்குக்கூடம், த.வி. வெங்கடேஸ்வரன், அறிவியல் வெளியீடு, சென்னை, விலை 75ரூ.
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ நோக்குக்கூடம் ஒன்றை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்து செயலில் இறங்கி வருகிறது. இதனை கண்டு பொதுமக்கள் அஞ்சிவரும் நிலையில், இந்த திட்டத்தால் எந்த ஆபத்தும் இல்லை என்பதை எளிய அறிவியல் மொழியில் விளக்குகிறது இந்நூல். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.