தியாகராயநகர் அன்றும் இன்றும்
தியாகராயநகர் அன்றும் இன்றும், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ.
சென்னையில் இதயம் போன்ற பகுதி தியாகராயநகர். நகைக்கடைகள், பெரிய பெரிய பட்டு ஜவுக்களிக்கடைகள் இங்கு அதிகம். அதுமட்டுமல்ல, சினிமா நட்சத்திரங்கள், வி.ஐ.பி.க்கள் நிறைய பேர் வகிக்கிறார்கள். தியாகராயநகர் முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை, அதே பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் நல்லி குப்புசாமி செட்டியார் இப்புத்தகத்தில் சுவைபட எழுதியுள்ளார். இங்கு வசித்த திராவிட இயக்கத் தலைவர்கள் பற்றிய விவரங்களும், மற்றும் ராஜாஜி, காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சத்தியமூர்த்தி, கண்ணதாசன் ஆகியோர் பற்றிய வியப்பூட்டும் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. தி. நகரில் பதிவாளர் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த என்.டி.ராமராவுக்கு சினிமா சான்ஸ் தேடிவந்த தகவல் திகைப்பூட்டுகிறது. சதித்திரத்தை சுவைபட கூறும் நூல். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.
—-
நல்லறம், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 30ரூ.
வடமொழியில், பொன்மொழிகளும், அறிவுரைகளும், நிறைந்த சமயோசித பத்ய மாலிகா என்ற பழைய நூல் உளளது. அதன் சாரத்தை அழகு தமிழில் வடித்துள்ளார், திருமுருக கிருபானந்தவாரியார். சிறிய நூல்தான். ஆனால் அரிய நூல். நன்றி: தினத்தந்தி, 1/7/2015.