வேத வரிகளும் தூதர் மொழிகளும்
வேத வரிகளும் தூதர் மொழிகளும், டாக்டர் கே.வி.எஸ். ஹவீப் முகம்மத், இஸ்லாமிய டிரஸ்ட் நிறுவனம், விலை 200ரூ.
திருக்குர்ஆன் என்பது இறைவாக்கு. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் ‘ஹதீஸ்’ எனப்படும். நபிகளாரின் பொன்மொழிகளும்,திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட நன்னெறிக் கருத்துகளும் சில ஆயிரம் பக்கங்கள் கொண்டவை. அத்தகைய இஸ்லாமிய கருத்துகளை அனைவரும் அறிந்திடும் வகையில் சுருக்கமாக டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத் இந்த நூலில் தொகுத்து வழங்கியுள்ளார்.
முஸ்லிம்களும், முஸ்லிம் அல்லாதவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் தனித் தனித்தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்டுள்ளது. சொற்பொழிவு ஆற்றுவோருக்கும், கட்டுரை எழுதுவோருக்கும், ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து இஸ்லாத்தின் பார்வை என்ன என்பதை எளிதில் அறியும் வகையில் ஆக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆதரவைப் பெற்ற இந்நூல் விரிவான முறையில் 2-ம் பாகமாக வெளிவந்துள்ளது.
நன்றி: தினத்தந்தி, 11/10/2017.