வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும்
வீர வ.உ.சி.யும் ஆஷ் கொலையும், சுஹைனா பதிப்பகம், பாளையங்கோட்டை, விலை 200ரூ.
சுதந்திரப் போராட்டத்தின்போது, மணியாச்சி ஜங்ஷனில் கலெக்டர் ஆஷ் துரையை வீரவாஞ்சி சுட்டுக்கொன்ற சம்பவம், வரலாற்றில் இடம் பெற்றதாகும். ஆஷ் துரை செய்த அட்டூழியங்கள், அவரை கொலை செய்ய வாஞ்சி வகுத்த திட்டங்கள் முதலியவற்றை, ஆசிரியர் செ. திவான் சிரமப்பட்டு சேகரித்துள்ளார். ஆஷ் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை, தன் எழுத்து வன்மையால் கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். ஆஷ் துரையை சுட்டுக்கொன்றபின், வாஞ்சி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறார். எனினும் கொலைக்கு திட்டமிட்டதாகவும், சதி செய்ததாகவும் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி உள்படி 14 பேர் மீது வழக்குத் தொடரப்படுகிறது. சிலர் தண்டனை அடைகிறார்கள். சிலர் விடுதலை செய்யப்படுகிறார்கள். வழக்கு பற்றிய விவரங்கள் விரிவாகத் தரப்பட்டுள்ளது. ஆஷ் துரை, வாஞ்சி உள்பட பலருடைய படங்கள் இடம் பெற்றுள்ளன. அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 28/10/2015.
—-
சிந்தனைக் கனிகள், கவிஞர் சௌ. ஆரோக்கியராக, கவின் பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.
மதம் மனிதநேயம் காண்பதற்கே, சுற்றுச்சூழல் காத்து சுகமுடன் வாழ்க உள்ளிட்ட 18 தலைப்புகளில் அன்றாட நாட்டு நடப்புகளை கூறும் கட்டுரைகளின் தொகுப்பாகும். நன்றி: தினத்தந்தி, 28/10/2015.