நட்பை வழிபடுவோம் நாம்
நட்பை வழிபடுவோம் நாம், கற்பக புத்தகாலயம், சென்னை, விலை 45ரூ.
நட்பிலே நல்ல நட்பு, போலி நட்பு, தீய நட்பு, கூடா நட்பு என்று பலவகை இருக்கின்றன. இலக்கியங்களும் அதை நமக்கு எடுத்து சொல்கின்றன. அத்தகைய நட்பையெல்லாம் இப்புத்தகத்தின் வாயிலாக விளக்குவதுடன் நல்ல நட்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில சான்றுகளை காட்டி அதன் வாயிலாக நட்பின் பெருமை உணர்த்தப்படுகிறது. கபிலர் – பாரியின் நட்பு, கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார் நட்பு, அவ்வையார் – அதியமான் நட்பு ஆகிய சங்க காலச் சான்றோர்களின் நட்பை இன்றைய இளைய சமுதாயத்திற்கு உருக்கமுடன் உணர்த்தியிருக்கிறார் எழுத்தாளர் தமிழருவி மணியன். நன்றி: தினத்தந்தி, 23/12/2015.
—-
தெளிவுபெறுஓம், சூரியன் பதிப்பகம், விலை 160ரூ.
ஆன்மிகம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு இந்து மகான்கள் அளித்த பதில்களை இந்த நூலில் பிரபு சங்கர், பரணி குமார் ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளார். இறைவனை பிள்ளையார், முருகன், விஷ்ணு, சிவன், தேவி என பல வடிவங்களில் வழிபடுவது ஏன்?, கடவுளுக்கு முடி காணிக்கை செலுத்துகிறார்களோ, அது சரிதானா?, கார்த்திகை தீபத்தை கொண்டாடுவதன் தத்துவம் என்ன? தன்னை அதிகமாக வணங்குபவர்களேயே இறைவன் அதிகமாக சோதிக்கிறாரே ஏன்? தோப்புக் கரணம் போடுவது ஏன்? கல்யாணம் ஆகாத பெண்கள் சுந்தர காண்டம் படிக்கலாமா? என்பன போன்ற கேள்விகளுக்கு அர்த்தமுள்ள பதில்கள். நன்றி: தினத்தந்தி, 23/12/2015