கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள்

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள், குடவாயில் பாலசுப்ரமணியன், சூரியன் பதிப்பகம்   தமிழகத்தில் பல முக்கியமான கல்வெட்டுகள் இருக்கும் இடங்கள் கோயில்கள். பண்டைத் தமிழ் மன்னர்கள் கோயில்களைக் கட்டியதுடன் தங்களைச் சார்ந்த பல செய்திகளை கல்வெட்டுகளிலேயே பதித்துவைத்தார்கள். கோயில் கல்வெட்டுகள் பகரும் செய்திகள் தொடர்பாக ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நோய் அரங்கம்

நோய் அரங்கம், கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை: ரூ.275 மருத்துவம் மிகப் பெரும் வியாபாரமாக உருக்கொண்டிருப்பதற்கு மக்களின் விழிப்புணர்வின்மையும் மிகமுக்கிய மூலதனம். பல்வேறு ஊடகங்களிலும் தொடர்ந்து நோய்கள் குறித்தும், அதை எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் எளிமையாக எழுதிவருபவர் டாக்டர் கு.கணேசன். தலைவலி, மூட்டுவலி, சீதபேதி தொடங்கி எபோலா, டெங்கு என ஜிகா வைரஸ் வரை இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசுகிறார். பற்கள், நகங்களைப் பாதுகாக்கும் விஷயங்களும் இப்புத்தகத்தில் உள்ளன. வெறுமனே நோய் அறிகுறிகளையும், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மட்டும் இவர் பேசுவதில்லை. […]

Read more

சுகப்பிரசவம் இனி ஈஸி

சுகப்பிரசவம் இனி ஈஸி,  டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.150 சுகப்பிரசவம் இனி ஈஸி என்று நூலின் தலைப்பு சொன்னாலும், சுகப்பிரசவம் எளிதாக அமைய எவ்வளவு விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நூலாசிரியர் சொல்கிறதைப் படிக்கும்போது மலைப்பாக இருக்கிறது. ஒரு பெண் கருவுறுதலுக்கு முன்பிருந்து எவ்வாறு தனது உடல் நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதிலிருந்து தொடங்கி, குழந்தை பிறந்து தாய்ப்பால் கொடுப்பது வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நூல் விளக்குகிறது. தொற்றுநோய்கள் குறித்து கவனமாக இருக்க வேண்டும்; பயணங்களைத் […]

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன்,  டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம்,  பக்.304, விலை ரூ.200. மருத்துவம் சார்ந்த நூல்கள் எத்தனையோ வந்திருக்கின்றன. ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நூலாக இது விளங்குகிறது.கண்ணுக்குப் புலப்படாத உள்ளுறுப்புகள் எப்படி உயிரைத் தாங்கிப் பிடிக்கும் உன்னத வலிமையுடன் விளங்குகின்றன என்பதை ஆசிரியர் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இதயத்தின் அடிப்படை செயல்பாடுகளில் ஆரம்பித்து இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அதி நவீன சிகிச்சைகள் வரை அலசப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமன்றி, உடலில் ஏற்படும் பல்வேறு நோய்கள், அதற்கான காரணங்கள், அதன் விளைவுகள் என அனைத்து விஷயங்களும் […]

Read more

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம், கே.என்.சிவராமன், சூரியன் பதிப்பகம், விலை 320ரூ. 60 சுவை விருந்து பராசக்தியின் கா கா கா எள்ற பிரபல பாடல் ஷுட் செய்யும்போது காகங்களே கிடைக்கவில்லை. பிறகு எப்படி சமாளித்தார்கள்? ஏராளமான புறாக்களைப் படித்துக் கறுப்பு வண்ணம் பூசி… தமிழ்திரையுலகில் நாமறியாத பல விவரங்கள் பற்றி 2…3 டாக்டரேட் செய்யுமளவு ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் கே.என்.சிவராமன். படிக்க ஆரம்பித்தால் சீழே வைக்க முடியவில்லை என்று ஒரு சம்பிரதாயத்துக்குச் சொல்வோம்தான். ஆனால் இந்த அடேயப்பா ரகப் புத்தகத்தில் உள்ள பிரமிப்பூட்டும் விஷயங்கள்… […]

Read more

திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மும்பை தமிழர்கள்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மும்பை தமிழர்கள், அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம், பக். 240, விலை 240ரூ. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை விரிவாக்கி, தமிழர் உழைப்பால் இன்றைய மும்பை வளர்ச்சி பெற்றதை, இந்த நுாலில் ஆசிரியர் விளக்குகிறார். மும்பை, இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர். துறைமுகத் தொழிலாளர்கள் மூலம் மிகப்பெரும் இடத்தைப் பிடித்த வரதராஜ முதலியார், மும்பைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிய முன்னோடி சு.கந்தசாமி, ‘கலியுக வரதன்’ என்ற பட்டத்தை பெற்றவர் எனப் பலரது உழைப்பு எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சுதந்திரப் […]

Read more

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்

தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம், கே.என். சிவராமன், சூரியன் பதிப்பகம், விலை 320ரூ. தெரியாத விஷயம் எல்லாம் தமிழ் சினிமாவின் பழைய சங்கதிகள்தான். சாதனையாளர்களின் வாழ்வில் இருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சுவாரசியமான சாற்றின் துளிகள்தான். ஆனால் மரணமசாலா எழுத்தைக் கடைப்பிடிப்பதில் நிபுணரான பத்திரிகையாளர் கே.என்.சிவராமன் கைவண்ணத்தில் எடுத்தால் வைக்கவே முடியாத விதத்தில் எழுதப்பட்டிருக்கும் நூல்தான் தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களின் ஆரம்ப கட்டம், தோல்வியிலிருந்து மீண்டு வந்த தருணங்கள், சறுக்கி விழுந்து காணாமல் போன நொடிகள் என எதெல்லாம் படிக்க ஆர்வமாக […]

Read more

ஜமீன் கோயில்கள்

ஜமீன் கோயில்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, சூரியன் பதிப்பகம், விலை 140ரூ. ஜமீன்தார்கள் என்றாலே ராஜ கம்பீரமும், மிடுக்கும், அதிகாரத் தொனியும்தான் நினைவுக்கு வரும். ஆனால் அவர்களிடமும் மென்மையான மனம் இருந்ததையும், பாரம்பரியமான ஆன்மிக வழிபாடுகளை மேற்கொண்டிருந்ததையும் விளக்குவதுதான் இப்புத்தகம். நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026627.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நான் உங்கள் ரசிகன்

நான் உங்கள் ரசிகன், மனோபாலா, சூரியன் பதிப்பகம், விலை 180ரூ. ‘குங்குமம்’ வார இதழில் வெளிவந்த இந்த சூப்பர் ஹிட் தொடர், திரையுலகில் கால் பதிக்க முற்படும் / பாடுபடும் உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கும் நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம், விலை 200ரூ. எதை நம்புவது என்று தெரியாமல் எல்லா தரப்பையும் நம்பி, அனைத்து மருத்துவர்களையும் சந்தித்து சகல மருந்துகளையும் உட்கொண்டு மக்கள் வாழ்கின்றனர். இந்த அறியாமையை இந்நூல் போக்குகிறது. நன்றி: குங்குமம், 12/1/2018.  

Read more
1 2 3 5