திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மும்பை தமிழர்கள்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் மும்பை தமிழர்கள், அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி, சூரியன் பதிப்பகம், பக். 240, விலை 240ரூ.
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை விரிவாக்கி, தமிழர் உழைப்பால் இன்றைய மும்பை வளர்ச்சி பெற்றதை, இந்த நுாலில் ஆசிரியர் விளக்குகிறார்.
மும்பை, இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர். துறைமுகத் தொழிலாளர்கள் மூலம் மிகப்பெரும் இடத்தைப் பிடித்த வரதராஜ முதலியார், மும்பைத் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கிய முன்னோடி சு.கந்தசாமி, ‘கலியுக வரதன்’ என்ற பட்டத்தை பெற்றவர் எனப் பலரது உழைப்பு எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது.
சுதந்திரப் போராட்ட வீரர் செண்பக ராமன் பிள்ளை மனைவி லட்சுமி பாய் மும்பைக்கு பிழைப்பை நாடி வந்து, 1936 முதல், 1972 வரை வாழ்ந்தவர் என்ற தகவலும் உண்டு. சமூக சேவகர் கு.கலியபாபு, கணினி பொறியாளர் சுஜித் வில்சன் என்று 50 நல்ல தமிழ் உள்ளங்களை, நுாலாசிரியர் மும்பையின் பெருமைக்கு காரணமாக்கி வெளியிட்டிருக்கிறார். ஒரு புதிய முயற்சி.
நன்றி:தினமலர், 26/5/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818