சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும்

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம்,  பக்.280, விலை ரூ.250. கோயில் சார்ந்த குடிகளும் குடிகள் சார்ந்த கோயிலுமே தமிழர் வாழ்நெறி. ஆனால், கோயில்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் கூட அக்கோயில்களோடு தொடர்புடைய குளங்கள் குறித்து அறிந்திருப்பார்களா என்பது ஐயமே. இந்நூலில் திருக்கோயில்கள் குறித்தும், திருக்குளங்கள் குறித்தும் அரிய பல செய்திகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். திருவாரூர் கமலாலய தீர்த்தக் குளம் குறித்த முதல் கட்டுரையில் தொடங்கி, குத்தாலம், திருச்செங்கோடு, திருவேங்கடம், கும்பகோணம், திருவண்ணாமலை, தாராசுரம், சிதம்பரம் போன்ற தமிழக சிவாலயங்கள் குறித்தும், […]

Read more

தமிழக மரபுச் சுவடுகள்

தமிழக மரபுச் சுவடுகள், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம்,  பக். 344, விலை ரூ. 300.   தமிழர்களின் மரபுச் செல்வங்களில் அழிந்தவை போக, எஞ்சியிருக்கும் குறிப்பிட்ட சிலவற்றைப் பற்றி விரிவாக அறிமுகம் செய்கிறது இந்த நூல். கல்வெட்டுகளிலும் சாசனங்களிலும் (கூரை) “மேய்தல்’ என்ற சொல்லாட்சி விரவிக் கிடக்கிறது. ஆனால் மேய்தல் என்பதைத் தவறாகக் கருதி வேய்தல் என்று அதை மாற்றும் போக்கு உள்ளது. மேய்தல் என்பது சரியானது என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறார் நூலாசிரியர். மண்டபம் என்ற சொல்லுக்குப் பதிலாக “கற்பந்தல்’ என்ற சொல்லை சிராப்பள்ளி […]

Read more

இராஜேந்திர சோழன்

இராஜேந்திர சோழன் (வெற்றிகள்- தலைநகரம் – திருக்கோயில்), குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம், பக்.472, விலை ரூ.750. இராஜேந்திர சோழனின் வரலாற்றை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்ட பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கின்றனர். அவர்கள் எழுதிய வரலாற்று நூல்களில் விடுபட்டுப் போனவற்றை விரிவாக எழுதும் நோக்கில் இந்த வரலாற்று நூல் படைக்கப்பட்டுள்ளது. முதலாம் இராஜ ராஜனின் மகனான முதலாம் இராஜேந்திரனின் (கி.பி.1012 – 1044) வரலாற்றை விரிவாக இந்நூல் கூறுகிறது. நூலின் முதல் பகுதியில் பிற்காலச் சோழர் மரபு பற்றி சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.முதலாம் ராஜேந்திரன் […]

Read more

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள்

கல்வெட்டுகள் சொல்லும் கோயில் கதைகள், குடவாயில் பாலசுப்ரமணியன், சூரியன் பதிப்பகம்   தமிழகத்தில் பல முக்கியமான கல்வெட்டுகள் இருக்கும் இடங்கள் கோயில்கள். பண்டைத் தமிழ் மன்னர்கள் கோயில்களைக் கட்டியதுடன் தங்களைச் சார்ந்த பல செய்திகளை கல்வெட்டுகளிலேயே பதித்துவைத்தார்கள். கோயில் கல்வெட்டுகள் பகரும் செய்திகள் தொடர்பாக ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 18/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more