தமிழக மரபுச் சுவடுகள்
தமிழக மரபுச் சுவடுகள், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம், பக். 344, விலை ரூ. 300.

தமிழர்களின் மரபுச் செல்வங்களில் அழிந்தவை போக, எஞ்சியிருக்கும் குறிப்பிட்ட சிலவற்றைப் பற்றி விரிவாக அறிமுகம் செய்கிறது இந்த நூல்.
கல்வெட்டுகளிலும் சாசனங்களிலும் (கூரை) “மேய்தல்’ என்ற சொல்லாட்சி விரவிக் கிடக்கிறது. ஆனால் மேய்தல் என்பதைத் தவறாகக் கருதி வேய்தல் என்று அதை மாற்றும் போக்கு உள்ளது. மேய்தல் என்பது சரியானது என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறார் நூலாசிரியர்.
மண்டபம் என்ற சொல்லுக்குப் பதிலாக “கற்பந்தல்’ என்ற சொல்லை சிராப்பள்ளி குடைவரை மூலம் அறிமுகப்படுத்தும் ஆசிரியர், பாடவியம் என்றோர் இசைக்கருவியைக் கூறி அவை இடம்பெறும் சிற்பங்களையும் பட்டியலிடுகிறார்.
தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்திலேயே ஒரே கருத்துள்ள – இயமன் – மார்க்கண்டேயன் சிற்பத் தொகுதிகள் இரண்டை எடுத்து சோழர் காலத்துக்கும் நாயக்கர் காலத்துக்கும் இடையிலான கூரிய வேறுபாட்டை விளக்கும் ஆசிரியரின் பார்வை வியக்க வைக்கிறது.
இன்று செம்படவர் எனப்படுகிற சிவன்படவர் என்ற சொல்லைப் பற்றிய ஆய்வும் மேற்கோள்களும் சிறப்பு. தஞ்சைப் பெரிய கோயிலில் கந்தகோட்டம், கூலிப் பிச்சையில் குதிரை எடுப்பும் சிறப்பான அறிமுகம்.
இந்நூலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் எண்ணற்ற தகவல்களைக் கொண்டிருக்கிறது.
நன்றி: தினமணி, 27/12/21.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818