தமிழ்நாட்டு நீதிமான்கள்

தமிழ்நாட்டு நீதிமான்கள், கோமல் அன்பரசன், சூரியன் பதிப்பகம், விலை 190ரூ. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறை வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பாக உள்ளது இந்த நூல். நன்றி: குங்குமம், 12/1/2018.

Read more

செகண்ட் ஒப்பினியன்

செகண்ட் ஒப்பினியன், டாக்டர் கு.கணேசன், சூரியன் பதிப்பகம், பக்கம் 304, விலை ரூ.200. நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஒரு மருத்துவர் கூறும் நோய் குறித்தோ, பரிந்துரைக்கும் சிகிச்சை குறித்தோ நோயாளிக்கு சந்தேகம் வரும்போது, வேறு மருத்துவரிடம் மறுஆலோசனை கேட்கத் தயங்குவோருக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்துவது , நோய் வரும் முன்னர் காக்கும் வழிகளை எடுத்துச் சொல்வது ஆகியவையே இந்த நூலின் முக்கிய சாராம்சமாகும். அதனை அடிப்படையாகக் கொண்டு நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஏற்படும் முக்கியமான நோய்கள் மற்றும் அதற்கான சிகிச்சைகள், சிகிச்சையளிக்கும் […]

Read more

உயிர்ப்பாதை

உயிர்ப்பாதை, கே.என். சிவராமன், சூரியன் பதிப்பகம், பக். 256, விலை 200ரூ. இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சயாம் – பர்மா இடையில் ரயில் பாதை அமைக்க ஜப்பான் முற்பட்டதும், அதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ்த் தொழிலாளர்கள் மரணமடைந்ததையும் சுவாரசியமான நடையில் விளக்கும் நூல். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

எனக்குரிய இடம் எங்கே

எனக்குரிய இடம் எங்கே?, ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. கல்விச் சீர்திருத்தம், அதற்கு தேவைப்படுகிற சுதந்திரம், அதற்குண்டான சிந்தனைகள் என எவ்வளவோ கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பேராசிரியர் மாடசாமி இதில் எடுத்துரைப்பது மிக எளிய வகை. ஒரு வகுப்பறை யாருக்குச் சொந்தம்? அது ஆசிரியரின் இடமா? மாணவனின் இடமா? ஆசிரியர் இடம் எனில், மாணவனுக்குரிய இடம் எங்கே? இப்படிக் கேள்விகளை எழுப்பி, பள்ளிகளையும், கல்லூரிகளையும் பிரியமாக எடுத்துக் கொள்ளாத சூழ்நிலைகளை இந்த நூலில் அவர் ஆராய்கிறார். மாணவர்கள் தங்களை அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் […]

Read more

நூறு வயது வாழ நூறு உணவுகள்

நூறு வயது வாழ நூறு உணவுகள், ஆர். வி. பதி. அழகு பதிப்பகம், விலை 140ரூ. நீண்ட நாட்கள் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளது. அப்படிப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் பழங்கள், கீரைவகைகள், தானியங்கள், காய்கறிகள் போன்ற நூறு வகையான உணவு முறைகளையும், அதன் பயன்பாடுகளையும் இந்த நூலில் ஆர். வி. பதி எடுத்துக்கூறியுள்ளார். நோய்கள் வராமல் தடுக்கவும், உடலைச் சீராக வைத்துக் கொள்ளவும் இந்த நூல் பெரிதும் பயன்படும். நன்றி: தினத்தந்தி, 22/6/2016.   —-   […]

Read more

ஸ்ரீ அரவிந்த் அன்னை

ஸ்ரீ அரவிந்த் அன்னை, எஸ். ஆர் . செந்தில் குமார், சூரியன் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மிரா அல் – பாஸாவாக பிறந்த பெண் குழந்தை, இந்தியாவில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னையாக மலர்ந்த விதத்தை கூறுகிறது இந்நூல். கருவிலே திருவுடன் பொலிந்து பிறந்து வளர்ந்த காலத்தில் தாம் தெய்விக குழந்தை என்பதை நிரூபித்தார், மிரா. பின்பு அல்ஜீரியா சென்று தியான் என்பவரிடம் சித்துக்கலை பயின்றார். ஒருமுகப்பட்ட மனதின் வலிமை குறித்து மிராவின் ஆராய்ச்சிகள், சோதனைகள் பவுத்த […]

Read more

நடிகைகளின் கதை

நடிகைகளின் கதை, யுவகிருஷ்ணா, சூரியன் பதிப்பகம், விலை 150ரூ. சில நடிகைகளின் சொந்த வாழ்க்கை அவர்கள் நடித்த படங்களைவிட வியப்பும், திகைப்பும் நிறைந்தவையாக இருக்கும். உதாரணமாக, “சிவந்த மண்” காஞ்சனா, பல படங்களில் நடித்து சிறைய சம்பாதித்தார். அதையெல்லாம் அவருடைய அப்பாவே அபகரித்துக்கொண்டார். சட்டத்தின் துணையுடன் போராடி, ரூ.15கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்டார். அதை அப்படியே திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு, பெங்களூரு புறநகரில் சிறிய வாடகை வீட்டில் வசித்தார். கன்னட திரை உலகின் கனவு கன்னியாகத் திகழ்ந்த கல்பனா, யாரும் எதிர்பாராத விதமாக […]

Read more

தெளிவு பெறுஓம்

தெளிவு பெறுஓம், பிரபுசங்கர், ந.பரணிகுமார், சூரியன் பதிப்பகம், பக். 231, விலை 160ரூ. இந்த நூலில், ஆன்மிக தேடல்கள் பலவற்றிற்கும் விளக்கம் தரப்பட்டுள்ளன. ‘உடல் மனதைக் கட்டுப்படுத்துகிறதா அல்லது மனம் உடலைக் கட்டுப்படுத்துகிறதா’ என்ற வினாவிற்கு தரப்பட்டுள்ள, ‘ஒட்டக குரு’ விளக்கம் (பக். 16), இரவில் படுக்கும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகம் (பக். 24), கார்த்திகை தீபம் கொண்டாடுவதன் தத்துவம் (பக். 35), பீமன், அர்ச்சுனன் இருவரும் செய்த பூஜையில் உள்ள வேறுபாடு (பக். 42), தத்தாத்ரேயர் மனதை ஒருமுகப்படுத்த கற்றுக்கொண்ட விவரம் […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. ஏழ்மையின் செல்வாக்கு! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024759.html பழமொழி என்ற சொல், சொலவடை என, புதுக்கப்பட்டது. நம் பண்பாட்டின் நிலைக்களனாய் உள்ள கிராமங்களில், உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகும், உன்னத அனுபவங்களில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளே, இந்த சொலவடைகள். வாழ்வியல் அனுபவம், கவித்துவம், நக்கல் மூன்றும் கலந்து இதில் மிளிர்கிறது. நாட்டுப்புற இலக்கியமாய் தெம்மாங்கு, பள்ளு, கும்மி, லாவணி ஏடுகளில் பதிவாகி உள்ளன. வீட்டுப்புற […]

Read more

ஹோம் கார்டன்

ஹோம் கார்டன், பா. ன்சென்ட், சூரியன் பதிப்பகம், விலை 100ரூ. ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு, சமீபகாலமாக மக்களை வீட்டுத் தோட்டத்தின் பக்கம் ஈர்த்து வருகிறது. வீட்டிற்கு தேவையான காய்கறிகளை சாகுபடி செய்வதுடன், ‘டென்ஷனை’ குறைக்கவும், வீட்டுத் தோட்டங்கள் வரவேற்பை பெற்று வருகின்றன. அதீக செலவில்லாமல், அதீத உழைப்பும் தேவையில்லாமல், குறைவான இடத்தில் வீட்டுத் தோட்டம் அமைக்க ஆலோசனைகளை கூறியுள்ளார் நூலாசிரியர். மொட்டை மாடி மட்டுமின்றி, வீட்டு பால்கனியில்கூட செடி வளர்ப்பதற்கான எளிய ஆலோசனைகள் இடம் பெற்றுள்ளன. காய்கறிகள் முதல் […]

Read more
1 2 3 4 5