ஸ்ரீ அரவிந்த் அன்னை
ஸ்ரீ அரவிந்த் அன்னை, எஸ். ஆர் . செந்தில் குமார், சூரியன் பதிப்பகம், பக். 208, விலை 150ரூ.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மிரா அல் – பாஸாவாக பிறந்த பெண் குழந்தை, இந்தியாவில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரவிந்த அன்னையாக மலர்ந்த விதத்தை கூறுகிறது இந்நூல். கருவிலே திருவுடன் பொலிந்து பிறந்து வளர்ந்த காலத்தில் தாம் தெய்விக குழந்தை என்பதை நிரூபித்தார், மிரா.
பின்பு அல்ஜீரியா சென்று தியான் என்பவரிடம் சித்துக்கலை பயின்றார். ஒருமுகப்பட்ட மனதின் வலிமை குறித்து மிராவின் ஆராய்ச்சிகள், சோதனைகள் பவுத்த தியானயோகத்தில் தேர்ந்த திருமதி. அலெக்ஸாண்ட்ரா நட்பை தேடித்தந்தது. சுவாமி விவேகானந்தரின் ‘ராஜ யோகம்‘ நூல், மிராவை இந்தியா நோக்கி திருப்பியது. அரவிந்தருடன் சேர்த்தது. ஸ்ரீ அரவிந்த அன்னையாக மலர்ந்த மணம் பரப்பச் செய்தது.
அரவிந்தரின் யோக வாழ்வில், அன்னை இணைந்தது பற்றி பல புகார்களுக்கு, அன்னையின் வாழ்வின் நோக்கம்(பக். 138), அரவிந்தர் நமக்கு குரு(பக். 151), பணத்தின் தேவை, மதிப்பு, பயன்பாடு குறித்து அன்னையின் கருத்துக்கள் (பக். 171-172), உடலிச்சையை வெல்வது குறித்த அன்னையின் கேள்விகளுக்கு அரவிந்தரின் பதில்கள்(பக். 126) ஆகியவை தெளிவான பதிலளிக்கின்றன. நூலாசிரியரின் நடை, பாலகுமாரனை நினைவுப்படுத்துகிறது.
-திருநின்றவூர் ரவிக்குமார்.
நன்றி: தினமலர் 5/6/2016.