உலக மக்கள் வரலாறு

உலக மக்கள் வரலாறு, ஹார்மன், தமிழில் மு. வசந்தகுமார், நிழல் வண்ணன், விடியல் பதிப்பகம், விலை 1100ரூ.

உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறை தொடங்கி, மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், இனக்குழுக்கள், பொருளாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றிய கருத்துகள் அடங்கிய நூல். சமகால நிகழ்வுகளுடனான ஒப்பீட்டுடன் பழைய வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது.

நன்றி: தி இந்து, 28/5/2016.

 

—-

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம், மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ.

காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் அமைத்துக் கொடுத்தவர் என்று கருதப்படும் ஜே.சி. குமரப்பாவின் சிந்தனைகள் அடங்கிய நூல் இது. ஜே.சி. குமரப்பாவின் வாழ்க்கை வரலாறு, பரவல் முறை உற்பத்தி, விநியோகம், குடிசைத் தொழில்கள் பற்றிய அவரது பார்வை என்று பல விஷயங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன.

நன்றி: தி இந்து, 28/5/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *