தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி

தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி, மா.பா.குருசாமி, காந்திய இலக்கியச் சங்கம், பக்.10, விலை ரூ.100. ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இரா.கனகசபாபதி. ஆனால் அதற்குப் பின்பு கல்விப் பணியிலும், சமூக சேவைப் பணியிலும் ஈடுபட்டவர். அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், இரா.கனகசபாபதியின் காந்தியப் பற்றையும், சேவைகளையும் இந்நூலில் சுவைபட விவரித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் காந்தியச் சிந்தனையில் சான்றிதழ், பட்டயப் படிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, அவர் பணிபுரிந்த ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியிலும் […]

Read more

உலக மக்கள் வரலாறு

உலக மக்கள் வரலாறு, ஹார்மன், தமிழில் மு. வசந்தகுமார், நிழல் வண்ணன், விடியல் பதிப்பகம், விலை 1100ரூ. உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறை தொடங்கி, மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், இனக்குழுக்கள், பொருளாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றிய கருத்துகள் அடங்கிய நூல். சமகால நிகழ்வுகளுடனான ஒப்பீட்டுடன் பழைய வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி: தி இந்து, 28/5/2016.   —- டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம், மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் […]

Read more

குமரப்பா கலைக்களஞ்சியம்

குமரப்பா கலைக்களஞ்சியம், மா.பா. குருசாமி, மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியீடு. உள்ளூரில் தோல்வியுள்ள ‘தாய்மை பொருளாதாரம்’ மா.பா. குருசாமி எழுதிய ‘குமரப்பா கலைக்களஞ்சியம்‘ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியிட்டு உள்ளது. எழுத்தாளர் குமாரசாமி, 80 வயது நிரம்பியவர். அவரது 150வது நூல் இது என்பது சிறப்பு அம்சம். ஜே.சி. குமரப்பா காந்தியின் சீடர். தஞ்சையில் பிறந்தவர். 1930களில், பட்டயக் கணக்கர் ஆவதற்கான சி.ஏ. தேர்வில் வெற்றிபெற்றார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், ‘இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் ஐரோப்பிய […]

Read more

வண்ண மலர்த் தோட்டம்

வண்ண மலர்த் தோட்டம், மா.பா. குருசாமி, காந்திய இலக்கிய சங்கம், பக். 116, விலை 50ரூ. சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தவை கதைகள். அதனால் கதை புத்தகங்கள் அதிகம் வெளிவருகின்றன. கதை சொல்வோரும், எழுதுவோரும் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவர்களுக்கான கவிதைகளை எழுதி, ‘வண்ண மலர்த்தோட்டம்’ தலைப்பில் புத்தகமாக்கியுள்ளார், முனைவர் மா.பா. குருசாமி. குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதுவது என்பது காற்றில் பறக்கும் பஞ்சுப் பொதிகளை கையில் பிடிப்பது போலத்தான். சுதந்திரமாய் சோலையில் சுற்றித்திரியும் வண்ணத்துப் பூச்சிகள்போல் வலம் வரும் குழந்தைகளுக்காக எழுத நினைப்போருக்கு எளிமையும், மனத்தூய்மையும், […]

Read more