வண்ண மலர்த் தோட்டம்

வண்ண மலர்த் தோட்டம், மா.பா. குருசாமி, காந்திய இலக்கிய சங்கம், பக். 116, விலை 50ரூ.

சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தவை கதைகள். அதனால் கதை புத்தகங்கள் அதிகம் வெளிவருகின்றன. கதை சொல்வோரும், எழுதுவோரும் அதிகம் இருக்கும் நிலையில், சிறுவர்களுக்கான கவிதைகளை எழுதி, ‘வண்ண மலர்த்தோட்டம்’ தலைப்பில் புத்தகமாக்கியுள்ளார், முனைவர் மா.பா. குருசாமி. குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதுவது என்பது காற்றில் பறக்கும் பஞ்சுப் பொதிகளை கையில் பிடிப்பது போலத்தான். சுதந்திரமாய் சோலையில் சுற்றித்திரியும் வண்ணத்துப் பூச்சிகள்போல் வலம் வரும் குழந்தைகளுக்காக எழுத நினைப்போருக்கு எளிமையும், மனத்தூய்மையும், குழந்தை மனமும் இருந்தால்தான் குழந்தைக் கவிகளும் பிறக்கும். பலதலைப்புகளில் 100 கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. கட்டை வண்டிக் குப்பன் குட்டைக் காளை பூட்டி குட்டை நாடிப் போனான் கெட்டி மண்ணைத் தேடி! என்னும் வரிகள் ‘இன்பம் உண்டு’ என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ளன. இதுபோல் சந்தமான வரிகளை கவிதைகளாக்கி குழந்தைகளை மகிழ வைத்திருக்கிறார். -வின். நன்றி: தினமலர், 27/12/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *