கவிக்கோ கருவூலம்
கவிக்கோ கருவூலம், கவிக்கோ அறக்கட்டளை, சென்னை, விலை 1000ரூ.
கவிக்கோ என்று அனைவராலும் அன்புடனும், பெருமிதத்துடனும் அழைக்கப்பட்டவர் கவிஞர் அப்துல் ரகுமான். வெற்றி பல கண்டு நான் விருது பெற வரும்போது வெகுமானம் என்ன வேஷடும் என்று கேட்டால், அப்துல் ரகுமானைத் தருக என்பேன் என்று கலைஞர் கருணாநிதியால் புகழாரம் சூட்டப்பட்டவர் அவர். அவரது பவள விழாவையொட்டி அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் வழங்கிய கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு. தமிழ் கவிதைகளின் உச்சம் தொட்ட கவிக்கோவை தமிழ் ஆர்வலர்கள் வியந்தும், புகழ்ந்தம் எழுதிய உணர்ச்சி மிகு கட்டுரைகள், பாவலர்கள் பாடிய பாமாலைகள் இந்த நூலை மணம் கமழும் – மனம் கவரும் பூந்தோட்டமாகப் பொலியுறச் செய்துள்ளது. கவிக்கோவின் பல்வேறு பரிணாமங்களையும், பரிமாணங்களையும் அறிந்து கொள்ளும் அரிய பெட்டகம். நன்றி: தினத்தந்தி, 23/12/2015.
—-
கறைபடியும் காந்தி தேசம், அ. பாஸ்கர், நீயூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 70ரூ.
ஜனசக்தி இதழில் வெளியான 14 கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. சமகால இந்திய வாழ்க்கையின் மீது நூலாசிரியருக்கு உள்ள தார்மீக கோபம்தான் இந்த கட்டுரை தொகுப்பு. நன்றி: தினத்தந்தி, 23/12/2015