காந்தியடிகளும் குழந்தைகளும்

காந்தியடிகளும் குழந்தைகளும், ஆர்.கே.பிரபுசேவக் போஜ்ராஜ், தமிழாக்கம்: அ.இராமசாமி, காந்திய இலக்கியச் சங்கம், விலை: ரூ.130. காந்தியின் 150-வது ஆண்டுவிழாவையொட்டி மறுபதிப்பு செய்யப்பட்டுள்ள குழந்தைகளுக்கான காந்திய நூல்.காந்தியின் குழந்தைப் பருவம், குழந்தைகளுக்கான அவரது அறிவுரைகள் என்று காந்தியத்தை ஒரு வாழ்வியல் நெறியாக அறிமுகப்படுத்தும் நூல் நன்றி: தமிழ் இந்து, 9/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வள்ளுவப் பொருளியல்

வள்ளுவப் பொருளியல், டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய இலக்கியச் சங்கம், பக். 384, விலை ரூ.200. திருக்குறளைப் பல்வேறு கோணங்களில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நூலிலுள்ள 23 கட்டுரைகளும் வள்ளுவர் கூறும் பொருளியலின் ஆழத்தையும் அகலத்தையும் விரித்துரைக்கிறது. பொருட்பால், அமைச்சியல், நட்பியல், குடியியல், ஆகியவற்றுள் வருகின்ற பல அதிகாரங்கள் அனைவருக்கும் பொதுவானவையாகும். மேலும், புறவாழ்விற்குத் தேவையான பல கருத்துகள் பொருட்பாலில் உள்ளன. உலகப் பொருளியல் வல்லுநரான கார்ல்மார்க்சின் பொருளியல் கோட்பாடுகளோடு திருவள்ளுவரின் பொருளியல் கோட்பாடுகளை ஒப்பீட்டு முறையில் காட்டியிருக்கிறார். திருவள்ளுவர் காலச் சூழலும் […]

Read more

தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி

தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி, மா.பா.குருசாமி, காந்திய இலக்கியச் சங்கம், பக்.10, விலை ரூ.100. ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் இரா.கனகசபாபதி. ஆனால் அதற்குப் பின்பு கல்விப் பணியிலும், சமூக சேவைப் பணியிலும் ஈடுபட்டவர். அவருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், இரா.கனகசபாபதியின் காந்தியப் பற்றையும், சேவைகளையும் இந்நூலில் சுவைபட விவரித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் காந்தியச் சிந்தனையில் சான்றிதழ், பட்டயப் படிப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, அவர் பணிபுரிந்த ஆதித்தனார் கலை, அறிவியல் கல்லூரியிலும் […]

Read more