வள்ளுவப் பொருளியல்

வள்ளுவப் பொருளியல், டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய இலக்கியச் சங்கம், பக். 384, விலை ரூ.200. திருக்குறளைப் பல்வேறு கோணங்களில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நூலிலுள்ள 23 கட்டுரைகளும் வள்ளுவர் கூறும் பொருளியலின் ஆழத்தையும் அகலத்தையும் விரித்துரைக்கிறது. பொருட்பால், அமைச்சியல், நட்பியல், குடியியல், ஆகியவற்றுள் வருகின்ற பல அதிகாரங்கள் அனைவருக்கும் பொதுவானவையாகும். மேலும், புறவாழ்விற்குத் தேவையான பல கருத்துகள் பொருட்பாலில் உள்ளன. உலகப் பொருளியல் வல்லுநரான கார்ல்மார்க்சின் பொருளியல் கோட்பாடுகளோடு திருவள்ளுவரின் பொருளியல் கோட்பாடுகளை ஒப்பீட்டு முறையில் காட்டியிருக்கிறார். திருவள்ளுவர் காலச் சூழலும் […]

Read more

டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. ஜேசி குமரப்பா: ஆளுமையும் கருத்துகளும் தஞ்சையில் பிறந்து இங்கிலாந்தில் படித்து தணிக்கையாளர் ஆகி, மும்பையில் தொழில் செய்த இளைஞர் அவர். பின்னர் அமெரிக்கா சென்று மேற்படிப்பு முடித்து மும்பை திரும்பியிருந்தார். மேற்கத்திய பாணியில் நடை உடை பாணிகள் கொண்டவர். பொருளாதாரம் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதை நூலாக வெளியிட காந்தியை அணுகுமாறு சொன்னார்கள். காந்தியை சந்திக்கப்போனபோது காத்திருக்க வேண்டியிருந்தது. பார்க்காமல் கட்டுரையை மட்டும் அளித்துவிட்டுத் திரும்பிவிட்டார். […]

Read more

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. அகில இந்திய கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனத்தை மகாத்மா காந்தியடிகள் நிறுவி அதற்குசெயலாளராக டாக்டர் ஜே.சி. குமரப்பாவை நியமித்தார். தமிழகத்தில் பிறந்த இவர், நாட்டுக்காக உழைத்த அறிஞர்களில் ஒருவர். காந்திய பொருளியலுக்கு உருவமும், உள்ளடக்கமும் கொடுத்தவர். அவருக்கு ‘கிராமக் கைத்தொழிலின் டாக்டர்’ என்று காந்தியடிகளே பட்டம் அளித்தார். உலகம் முழுவதும் புவி வெப்பமடைதலைக் குறைத்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற […]

Read more

வீடுதோறும் வெற்றி

வீடுதோறும் வெற்றி, டாக்டர் ந. சேதுராமன், கற்பகம் புத்தகாலயம், சென்னை, விலை 375ரூ. ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து டாக்டராக, தொழில் அதிபராக, அரசியல் கட்சித் தலைவராக வாழ்க்கையில் வெற்றி பெற்ற கதையை டாக்டர் ந.சேதுராமன் இந்த நூலில் சுவைபடச் சொல்கிறார். மருத்துவத் தொழிலில் ஈடுபட்டபோதிலும் நாணயமாக இருந்து நாணயம் சம்பாதித்ததைக் கூறுகிறார். தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடியே உரைக்கிறார். இந்த நூலைப் படித்துப் பார்த்தால் ஒரு சாதாரண மனிதர் படைத்த சாதனையைத் தெரிந்து கொள்ளலாம். நாமும் […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 152, விலை 70ரூ. பேராசான் டாக்டர் மு. வரதராசனார், கிராமங்களுக்காக வாழ்ந்த கர்மயோகி ரா. குருசாமி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார், காந்தியப் பேராசான் மகரிஷி க. அருணாசலம், காந்தியடிகள் கனவுகண்ட கிராம சுயராஜ்யத்தை உருவாக்க வாழ்நாளெல்லாம் தொண்டு செய்த கோ. வேங்கடாஜலபதி, அன்னைதெரசா போல் தமிழகத்திற்கு சேவை செய்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அன்னை லியோபிரவோ, மக்கள் தலைவர் ப. ஜீவானந்தம், தனித்துவம்மிக்க சர்வோதயத் தலைவர் ச.ஜெகந்நாதன், காந்தி முதல்வர் […]

Read more

கண்ணன் வருவாயா

கண்ணன் வருவாயா, வாழ்வியல் அனுபவங்கள், வரலொட்டி ரெங்கசாமி, தனலெட்சுமி பதிப்பகம், சென்னை, விலை 330ரூ. தன்னலமற்ற அன்பின் வெளிப்பாடு பகவத் கீதையைப் புனித நூலாக்கியது நாம் செய்த மிகப் பெரிய தவறு என்று இந்நூலைத் தொடங்கியுள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. பகவத் கீதையை ஒரு தத்துவமாக நினைத்து ஒதுக்கிவைக்காமல் வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகப் பார்க்கும்போது அதில் ஏராளமான வாழ்வியல் விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன என்கிறார் ஆசிரியர். பகவத் கீதையை முதிய வயதில் படிக்கலாம் என்னும் எண்ணம் குறித்த மாறுபட்ட கருத்தைப் பதிவு செய்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. […]

Read more