வள்ளுவப் பொருளியல்
வள்ளுவப் பொருளியல், டாக்டர் மா.பா.குருசாமி, காந்திய இலக்கியச் சங்கம், பக். 384, விலை ரூ.200.
திருக்குறளைப் பல்வேறு கோணங்களில் அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்நூலிலுள்ள 23 கட்டுரைகளும் வள்ளுவர் கூறும் பொருளியலின் ஆழத்தையும் அகலத்தையும் விரித்துரைக்கிறது.
பொருட்பால், அமைச்சியல், நட்பியல், குடியியல், ஆகியவற்றுள் வருகின்ற பல அதிகாரங்கள் அனைவருக்கும் பொதுவானவையாகும். மேலும், புறவாழ்விற்குத் தேவையான பல கருத்துகள் பொருட்பாலில் உள்ளன.
உலகப் பொருளியல் வல்லுநரான கார்ல்மார்க்சின் பொருளியல் கோட்பாடுகளோடு திருவள்ளுவரின் பொருளியல் கோட்பாடுகளை ஒப்பீட்டு முறையில் காட்டியிருக்கிறார்.
திருவள்ளுவர் காலச் சூழலும் கருத்தும் என்கிற முதல் கட்டுரை, வள்ளுவர் கூறியதைப் போல மெய்ப்பொருள் காணச் சொல்கிறது.
பொருட்பாலின் வைப்புமுறையின் தன்மை பற்றியும், அரசியல் பொருளாதாரம் பற்றியும், உழவு, உழைப்பு, உயர்வு, வாணிகம், பொதுநீதி, வறுமை, செல்வம், குடிபிறப்பு முதலிய பல இன்றியமையாதவற்றையும் அலசி ஆராய்ந்திருக்கிறது இந்நூல்.”,
நன்றி: தினமணி, 7/1/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818