போர்ஹெஸ் கதைகள்
போர்ஹெஸ் கதைகள், தமிழில் பிரம்மராஜன், யாவரும் வெளியீடு, விலை 550ரூ.
20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்பானிய எழுத்தாளர்களில் ஒருவரான போர்ஹெஸ், உலகம் முழுக்க எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பாதித்தவர். தன் வாழ்நாளில் நாவலே எழுதாத இவர் லத்தீன் அமெரிக்க நாவல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுகிறார்.
ஐநூறு பக்க நாவல் தரும் பிரம்மாண்டத்தையும் திகைப்பையும் தனது சிறுகதைகளில் உருவாக்கிவிடக் கூடியவர். அனுபவங்கள், தத்துவங்கள், கருத்தியல்கள், வரலாறு எல்லாமும் ஒரு புனைவுதானோ என்ற எண்ணத்தை உருவாக்கக் கூடிய போர்ஹெஸின் சிறந்த கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது.
தமிழின் சிறந்த கவிஞர்களுள் ஒருவரான பிரம்மராஜனின் பல ஆண்டு கால உழைப்பில் உருவான மொழிபெயர்ப்பு இது.
நன்றி: தி இந்து, 9/1/19
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818