எனும்போதும் உனக்கு நன்றி

எனும்போதும் உனக்கு நன்றி, விஷால் ராஜா, ஜீவா படைப்பகம், விலை 99ரூ. உணர்விழைகளால் நூற்கப்பட்டவை இலங்கையின் மலையகத்தை இனி எஸ்தரின் கவிதைகளைக் கொண்டும் அடையாளப்படுத்தலாம். எஸ்தரின் முதல் தொகுப்பு இது. ‘விடுதலையை நினைத்தவனும் போராடியவனும் நிலமற்றுப்போன என் மலையக மூதாதையர்களுக்கும்’ என நூலின் சமர்ப்பணமே கவிதையாய் விரிகிறது. மெல்லிய உணர்விழைகளால் நூற்கப்பட்ட கவிதைகளைக் கொண்டிருக்கின்றன. காதல், காமம், சோகம், மகிழ்ச்சி, ஆற்றாமை, தவிப்பு, தோல்வி, பிரிவு, துரோகம், இயலாமை என மனிதருக்குள் ஊறும் உணர்வுகளை உருவி எடுத்துக் கவிதைகளாக்கியிருக்கிறார். மலையும் கடலும் வானமும் நதியும் […]

Read more

வெட்டப்படும் கட்டை விரல்

வெட்டப்படும் கட்டை விரல், ச.மருது துரை, அகரம் வெளியீடு. தஞ்சையைச் சேர்ந்த மருத்துவரும் கவிஞருமான ச.மருது துரை கடந்த இருபதாண்டுகளில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.  அறிவியல் தொழில்நுட்பத் தளங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை மருத்துவம் அடைந்திருந்தாலும் அது சமுதாயத் தளத்தில் பிரதிபலிக்காதது ஏன், சாமானியனுக்கும் நலவாழ்வு என்ற தத்துவத்தைத் தொலைத்துவிட்டு நகர்ப்புற நட்சத்திர மருத்துவமனைகளை முதன்மைப்படுத்தியது எது என்ற கேள்விகளை எழுப்பி அதற்கான காரணங்களை விளக்குவதோடு தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறார் மருதுதுரை. நன்றி: தி இந்து, 6/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்

மஹத் முதல் தலித் புரட்சியின் உருவாக்கம், ஆனந்த் டெல்டும்டே, தமிழில் கமலாலயன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 550ரூ.   பொதுக்குளத்தில் நீரெடுக்கும் உரிமைக்கான போராட்டம்தான் அம்பேத்கரின் தலைமையிலான தலித் இயக்கத்தின் தொடக்கம். 1927-ல் மஹத்தில் நடந்த இரண்டு மாநாடுகள் அதன் தொடக்கப்புள்ளி. ஆவணக் காப்பகத் தரவுகளைக் கொண்டு இதுவரை வெளிவராத தகவல்களை உள்ளடக்கியதாக இந்த நூலை எழுதியிருக்கிறார் ஆய்வாளரும் மனிதஉரிமைச் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே. முதல் மாநாட்டின் ஏற்பாட்டாளரான ஆர்.பி.மொரெ எழுதிய மராத்திய நூலின் மொழிபெயர்ப்பையும் இந்நூலில் சேர்த்திருப்பது சிறப்பு. நன்றி: […]

Read more

குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை

குழந்தை வளர்ப்பு என்னும் அரிய கலை, டி.வெங்கட்ராவ் பாலு, சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், விலை 300ரூ. உணவுப் பழக்கத்திலிருந்து உறங்கும் முறைவரை கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண் டிய நியமங்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள், குழந்தை பிறப்பின்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள், தாய்ப்பாலின் முக்கியத்துவம். குழந்தை வளர்ப்பின் பல்வேறு நிலைகள், தாய்-சேய் நலத்துக்கான மருத்துவக் குறிப்புகள், குழந்தையின் மனநலத்தைப் பேணுவதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றை விரிவாக விளக்கும் நூல் இது. குழந்தை வளர்ப்பில் தந்தையர்களுக்கான பங்கை உணர்த்தி அதை நிறைவேற்றுவதற்கான […]

Read more

சாமானியனும் சர்க்கரை நோயும்

சாமானியனும் சர்க்கரை நோயும், டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்,  உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம், சர்க்கரை நோய் குறித்த மாயைகளைக் களைந்து சாமானிய மக்கள் சர்க்கரை நோயை எப்படிக் கையாள வேண்டும் என்று விளக்குவதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்கான ஆரோக்கியமான நடவடிக்கைகளையும் பரிந்துரைக்கிறது இந்த நூல். நன்றி: தி இந்து, 6/1/19.   இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மறுக்கப்படும் மருத்துவம்

மறுக்கப்படும் மருத்துவம், தொகுப்பு: பு,பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு , பாரதி புத்தகாலயம், மருத்துவமும் கல்வியும் வணிகமயமாகி வருவது நம் சமகாலத்தின் மாபெரும் அவலங்களாகத் தொடர்கின்றது. இந்நிலையில் இந்திய மக்களவையில் தாக்கலாகியிருக்கும் மருத்துவ ஆணைய மசோதா (NMC Bill, 2017), மருத்துவக் கல்வியையும் மருத்துவத்தையும் ஒட்டுமொத்தமாக சந்தையிடம் ஒப்படைக்கும் முயற்சி என்று எச்சரிக்கும் நூல். தமிழகத்தைச் சேர்ந்த முக்கியமான மருத்துவர்கள், கல்விச் செயற்பாட்டாளர்களின் கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன. நன்றி: தி இந்து, 6/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

ஒல்லி பெல்லி

ஒல்லி பெல்லி, டாக்டர் கு.கணேசன் , கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. உடல் பருமன் ஆபத்தானது என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ள அதே நேரம், அதிலிருந்து விடுபடுவதற்கு ஆபத்து நிறைந்த வழிகளை நாடும் போக்கும் அதிகரித்துள்ளது. தொப்பையைக் குறைப்பது, உடல் பருமனால் விளையும் நோய்கள்குறித்த விழிப்புணர்வைப் பெறுவது, அதற்கான சிகிச்சைகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது, எடையைக் குறைப்பதற்கான சுயமுயற்சிகள் ஆகியவற்றை உரையாடலைப் போன்ற சுவாரஸ்யமான பாணியில் விளக்கும் நூல். அலோபதி மருத்துவத்தில் 30 ஆண்டு அனுபவம் பெற்ற டாக்டர் கு.கணேசன் ‘கல்கி’, வார இதழில் எழுதிய கட்டுரைகளின் […]

Read more

நாளும் நலம் நாடி

நாளும் நலம் நாடி, மருத்துவர் சி.அசோக் , மணிமேகலை பிரசுரம், அகில இந்திய வானொலியில் மருத்துவர் சி.அசோக் ஆற்றிய மருத்துவ உரைகளின் தொகுப்பே இந்த நூல். நோய்களுக்கான மருத்துவத்தைத் தாண்டி முழு உடல்நலம் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும் நல்ல உணவு, நல்ல உள்ளம் ஆகியவற்றைப் புரியவைக்கும் நோக்கத்துடனும் மருத்து வத்தைப் பாமரர்களுக்குப் புரியும் வகையில் எளிதாக்கிக் கொடுக்கும் முயற்சியாகவும் இந்த உரைகள் அமைந்துள்ளன. நன்றி: தி இந்து, 6/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

முன்னத்தி ஏர்

முன்னத்தி ஏர், பாமயன், இந்து தமிழ்’ வெளியீடு, விலை 130ரூ. இயற்கை வேளாண்மை இயக்கத்துக்குத் தமிழகத்தில் தடம் அமைத்துத் தந்த முன்னோடிகள் குறித்து மூத்த சூழலியல் அறிஞரும் இயற்கை வேளாண் வல்லுநருமான பாமயன், ‘இந்து தமிழ்’ நாளிதழில் எழுதிய இதே தலைப்பிலான தொடர் பரவலான வரவேற்பைப் பெற்றது. இந்தத் தொடர் புத்தகமாக வெளியாகியுள்ளது. நன்றி:தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027150.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

கடலம்மா பேசுறங் கண்ணு!

கடலம்மா பேசுறங் கண்ணு!, வறீதையா கான்ஸ்தந்தின்,இந்து தமிழ், கடல், மீன்கள், துறைவர்கள், அவர்களது சமூகம்-பண்பாடு-சூழலியல் குறித்து மிகப் பெரிய திறப்பைத் தந்த இதே தலைப்பிலான தொடர், ‘இந்து தமிழ்’ நாளிதழில் ஓராண்டுக்கும் மேலாக வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் புத்தகமாகவும் வெளியாகியுள்ளது நன்றி: தி இந்து, 5/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 0444959581

Read more
1 2 3 36