ஆர்.எஸ்.எஸ்: ஒரு திரை விலக்கம்

ஆர்.எஸ்.எஸ்: ஒரு திரை விலக்கம், ராவ்சாஹேப் கஸ்பே, தமிழில்: சுந்தரசோழன், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.195. அம்பேத்கரிய ஆய்வாளர் டாக்டர் ராவ்சாஹேப் கஸ்பே ஆர்.எஸ்.எஸ்ஸின் கோட்பாட்டு அடிப்படைகளை விளக்கும் விதமாகவும் அதன் சித்தாந்தத்தை ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தும் விதமாகவும் மராத்தியில் எழுதிய ‘ஜோட்’ என்னும் நூல் ஏழு பதிப்புகள் கண்டுள்ளது. 2019-ல் வெளியான இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்காக ராவ்சாஹேப் புதிதாக எழுதிச் சேர்த்த பகுதிகளையும் இணைத்து இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நன்றி: தமிழ் இந்து, 14/5/22, இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d/ இந்தப் புத்தகத்தை […]

Read more

விதியே கதை எழுது

விதியே கதை எழுது…., அப்சல், பாரதி புத்தகாலயம், விலைரூ.120 சிறுகதை மற்றும் கட்டுரைகளால் அறியப்பட்ட எழுத்தாளர் அப்சலின் முதல் நாவல். தனிமை என்பதே ஒரு கும்பலின் அளவளாவல் தான். மனசும், மனசாட்சியும், நிகழ்வுகளும் ஓயாது எதையாவது உரைத்துக் கொண்டே இருக்கும். இப்பேருண்மையின் பெருஞ்சான்றா உள்ளது இந்த நுால். இறப்பு, மரணம் என்ற வார்த்தையை கேட்டால், அச்சப்படும் ஒருவனின் வாழ்க்கையை பேசுகிறது. பேரன்பின் கனிவே மரணம் என அறிவதை, காதல், கருணை, மோகம், கலகலப்பு, உருக்கம் கலந்து சொல்லி உள்ளார். விதி எழுதும் கதைகள் விஸ்தாரமானது; […]

Read more

இப்படித்தான் ஜெயித்தார்கள்

இப்படித்தான் ஜெயித்தார்கள், ஒரு பத்திரிகையாளனின் நேர்காணல்கள், மோ.கணேசன், பாரதி புத்தகாலயம், பக்.239, விலை ரூ.230. “அப்போது எங்கள் வீட்டில் கேட்பதற்கு வானொலி பெட்டி கூட இல்லை’ என்கிறார் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத். பள்ளித் தேர்வில் நான்கு முறை தோல்வி அடைந்ததை சிரித்துக் கொண்டே கூறுகிறார் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன். சென்னை வந்த மூன்றே மாதத்தில் வீடு வாங்கினேன்- அப்போது எனக்கு வயது 15 என நம்மை புருவம் உயர்த்த வைக்கிறார் ஓவியர் ஸ்யாம். இதேபோன்று மணல் மாஃபியாக்களுக்கு முடிவு கட்டிய அமுதா ஐஏஎஸ், […]

Read more

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு, எம்.எஸ்.செல்வராஜ், பாரதி புத்தகாலயம், விலைரூ.100 இலங்கையின் வளர்ச்சிக்கு மலையகத்தமிழர்களின் பங்களிப்பு மிகுதி. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வும் போராட்டமும் சொல்லிட முடியாது. அவர்களின் வலியை உணர்த்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ள நுால். மனித உரிமைகள் பறிக்கப்பட்டு மிகவும் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகி நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள், மலையகத் தமிழர்களின் உழைப்பைச் சுரண்டியதை வரலாற்று கண்ணோட்டத்தோடு எடுத்துக்காட்டுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் உழைப்புச்சுரண்டலை இதழ்களில் வெளிப்படுத்திப் புது எழுச்சியை உண்டாக்கிய தஞ்சாவூரைச் சார்ந்த நடேசய்யர் பற்றிய செய்தியும் முக்கியமானது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் […]

Read more

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு,  தொகுப்பாசிரியர்: எம்.எஸ்.செல்வராஜ் , பாரதி புத்தகாலயம், பக்.96, விலை  ரூ.100. 1815- ஆம் ஆண்டு இலங்கையை பிரிட்டிஷார் கைப்பற்றினர். அங்கு அவர்கள் கட்டுமானப் பணிகளைச் செய்ய தமிழகத்திலிருந்து பலரை அழைத்துச் சென்றனர். பிரிட்டிஷ் முதலாளிகள் காப்பித் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்களை இலங்கையில் ஏற்படுத்தி, அவற்றில் வேலை செய்யவும் தமிழ்நாட்டிலிருந்து மக்களை அழைத்துச் சென்றனர். தமிழகத்தில் இருந்து சென்றவர்களால், இலங்கையின் பொருளாதாரம் மேம்பட்டது என்றாலும் தோட்டங்களில் வேலை செய்பவர்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படவில்லை. அவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்நிலையை […]

Read more

இதுதான் வைரல்

இதுதான் வைரல், ஹேமபிரபா, பாரதி புத்தகாலயம், விலைரூ.90. அறிவியல் பார்வையில் கொரோனா வைரஸ் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். தகவல்கள் முழுமையாக உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிபவரே எழுதியுள்ளார். வைரஸ் குறித்த வதந்திகளையும் விளக்கி தெளிவு ஏற்படுத்துவம் வகையில் அமைந்துள்ளது. தொற்று பரவல் குறித்து அறிவியல் ரீதியாக விளக்கி, நுட்பமான வகையில் தகவல்களை எளிய நடையில் விவரித்துள்ளார். வைரஸ் பரவும் விதத்தை விளக்கி, கட்டுப்படுத்துவதில் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறை, முன் எச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளார். பெருந்தொற்று நிலவும் காலத்தில், விழிப்புணர்வு […]

Read more

திரைக்கதை- கருவும் உருவும்

திரைக்கதை- கருவும் உருவும், சுரேஷ்வரன், பாரதி புத்தகாலயம், விலைரூ.150 சினிமாவின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் திரைக்கதை உள்ளது. ஒரு வலுவான கதையை, திரைக்கதை தான் சுவாரசியப்படுத்தும். இதை விவரிக்கிறது இந்த நுால். குறும்படம், முழுநீள சினிமா இரண்டிற்கும் திரைக்கதை எப்படி எழுத வேண்டும்; தயாரிப்பாளர், நாயகன், நாயகி ஆகியோரிடம் கதை சொல்லும் முறை குறித்து அறிய முடிகிறது. கதை தேர்வு, சொல்லும் நுணுக்கம், காட்சி விவரிப்பு, மெருகேற்றல் உள்ளிட்ட 31 தலைப்புகளில், நுால் ஆசிரியர் விளக்குகிறார். சினிமாவில் முதல் காட்சி என்பது, கதையின் […]

Read more

சிலேட்டுக்குச்சி

சிலேட்டுக்குச்சி, சக.முத்துக்கண்ணன், பாரதி புத்தகாலயம், விலைரூ.110 மாணவ – மாணவியரோடு செலவிடும் கொடுப்பினை, ஆசிரியர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அவர்களின் உளவியல் அனுபவங்களை, ஒரு ஆசிரியரால் தான் உள்வாங்க முடியும். அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிந்து, மாணவர்களின் வாழ்வியலை உள்வாங்கி, கட்டுரை தொகுப்பாக வெளியிட்டுள்ளார். ‘என்ன சிரிப்பு வேண்டியிருக்கு..’ என துவங்கி, ‘அவன விட்ருங்க பாஸ்..’ என முடியும், 17 கட்டுரைகள் முழுதும் சேட்டைகள் தான். கட்டுரைகள் பள்ளி காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. பழைய இலக்கியம் முதல், நவீன இலக்கியம் வரை வாசித்த […]

Read more

சாலை விபத்து தீர்வும் நஷ்டஈடும்

சாலை விபத்து தீர்வும் நஷ்டஈடும், ஏ.கே.எஸ்.தாஹிர், ஏ.எஸ்.பிலால், பாரதி புத்தகாலயம், பக். 84, விலை 70ரூ. சாலை விபத்து ஏற்பட்டால் சட்ட வழியில் நிவாரணம் பெறுவதற்கு உதவும் வகையில் தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். சட்ட சேவை மைய வழக்கறிஞர்கள் எளிமையாக படைத்துள்ளனர். விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. விபத்து எனும் ஆபத்தில் துவங்கி, கவனக்குறைவு மற்றும் உரிமைகள் என்பது உட்பட, 10 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. விபத்துக்கு பின் சுலபமாக நிவாரணம் பெறுவது, விபத்தை தடுக்கும் வழிமுறை என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. கடுகளவும் நீதி, நியாயம் […]

Read more

பார்வை தொலைத்தவர்கள்

பார்வை தொலைத்தவர்கள், யோசே சரமாகோ, தமிழில்: எஸ்.சங்கரநாராயணன், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.295. கரோனா காலத்தில் ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (தி ப்ளேக்) நாவல் வாசிக்கப்படுவதில் ஆச்சர்யமில்லை. கொள்ளைநோய் பற்றிய குறியீட்டுக் கதை என்றபோதும் அது நேரடியாகக் கதைசொல்லும் தன்மையில் அமைந்திருக்கிறது. ஆனால், யோசே சரமாகோவின் ‘பார்வை தொலைத்தவர்கள்’ (பிளைண்ட்னெஸ்) நாவலும் இந்தக் காலத்தில் அதிகம் வாசிக்கப்படும் நாவலாக இருக்கிறது. போர்த்துக்கீசிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சரமாகோ இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். 1995-ல் வெளியான இந்நாவல் விதிகளை மாற்றிப் போட்டு விளையாடும் புனைவின் சாத்தியங்களை […]

Read more
1 2 3 9