பார்வை தொலைத்தவர்கள்

பார்வை தொலைத்தவர்கள், யோசே சரமாகோ, தமிழில்: எஸ்.சங்கரநாராயணன், பாரதி புத்தகாலயம், விலை: ரூ.295. கரோனா காலத்தில் ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளைநோய்’ (தி ப்ளேக்) நாவல் வாசிக்கப்படுவதில் ஆச்சர்யமில்லை. கொள்ளைநோய் பற்றிய குறியீட்டுக் கதை என்றபோதும் அது நேரடியாகக் கதைசொல்லும் தன்மையில் அமைந்திருக்கிறது. ஆனால், யோசே சரமாகோவின் ‘பார்வை தொலைத்தவர்கள்’ (பிளைண்ட்னெஸ்) நாவலும் இந்தக் காலத்தில் அதிகம் வாசிக்கப்படும் நாவலாக இருக்கிறது. போர்த்துக்கீசிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான சரமாகோ இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்றவர். 1995-ல் வெளியான இந்நாவல் விதிகளை மாற்றிப் போட்டு விளையாடும் புனைவின் சாத்தியங்களை […]

Read more