மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி, சத்திய சோதனையில் ஒளிர்ந்த அகிம்சையின் திருவுரு – இராம் பொன்னு, சர்வோதய இலக்கியப் பண்ணை, பக்.480, விலை ரூ.250. வரலாற்றுப் பேராசிரியராக- கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நூலாசிரியர், மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் எழுதியுள்ளார். காந்தியின் பிறப்பு, கல்வி, சட்டக் கல்லூரியில் படிப்பதற்காக லண்டன் சென்றது, படிப்பு முடித்து இந்தியா திரும்பி வந்து பாரிஸ்டராகப் பதிவு செய்து கொண்டது, இந்திய நிறுவனம் ஒன்றிற்காக வழக்குரைஞராகப் பணி செய்ய தென்னாப்பிரிக்கா சென்றது, நேட்டாலில் நீதிமன்றத்தில் காந்தி […]

Read more

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம்

காந்தி வழியது உலகம் – காந்தியத்தின் உலகளாவிய தாக்கம், முதல் தொகுதி. இராம் பொன்னு, சர்வோதய இலக்கியப் பண்ணை, பக்.224, விலை ரூ.150. மகாத்மா காந்தியின் சிந்தனைகள் உலக அளவில் ஏற்படுத்திய தாக்கத்தைக் கூறும் நூல். கான் அப்துல் கஃபார் கான், மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, ஆங் சான் சூ கி, லான்சா டெல் வாஸ்டோ (சாந்திதாஸ்), சீசர் எஸ்ட்ரடா சாவெஸ், லெக் வலெசா ஆகியோர் மக்களுக்காக உலக அளவில் போராடியவர்கள். அவர்கள் பல்வேறு போராட்ட வழிமுறைகளைப் பின்பற்றினாலும் […]

Read more

உலக மக்கள் வரலாறு

உலக மக்கள் வரலாறு, ஹார்மன், தமிழில் மு. வசந்தகுமார், நிழல் வண்ணன், விடியல் பதிப்பகம், விலை 1100ரூ. உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கை முறை தொடங்கி, மனிதர்களுக்கு இடையிலான உறவுகள், இனக்குழுக்கள், பொருளாதாரம் என்று பல விஷயங்களைப் பற்றிய கருத்துகள் அடங்கிய நூல். சமகால நிகழ்வுகளுடனான ஒப்பீட்டுடன் பழைய வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. நன்றி: தி இந்து, 28/5/2016.   —- டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக் களஞ்சியம், மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. காந்தியத் தத்துவத்துக்குப் பொருளாதார வடிவம் […]

Read more

டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜேசி குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. ஜேசி குமரப்பா: ஆளுமையும் கருத்துகளும் தஞ்சையில் பிறந்து இங்கிலாந்தில் படித்து தணிக்கையாளர் ஆகி, மும்பையில் தொழில் செய்த இளைஞர் அவர். பின்னர் அமெரிக்கா சென்று மேற்படிப்பு முடித்து மும்பை திரும்பியிருந்தார். மேற்கத்திய பாணியில் நடை உடை பாணிகள் கொண்டவர். பொருளாதாரம் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதை நூலாக வெளியிட காந்தியை அணுகுமாறு சொன்னார்கள். காந்தியை சந்திக்கப்போனபோது காத்திருக்க வேண்டியிருந்தது. பார்க்காமல் கட்டுரையை மட்டும் அளித்துவிட்டுத் திரும்பிவிட்டார். […]

Read more

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம்

டாக்டர் ஜே.சி. குமரப்பாவின் கருத்துக்களஞ்சியம், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, விலை 300ரூ. அகில இந்திய கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனத்தை மகாத்மா காந்தியடிகள் நிறுவி அதற்குசெயலாளராக டாக்டர் ஜே.சி. குமரப்பாவை நியமித்தார். தமிழகத்தில் பிறந்த இவர், நாட்டுக்காக உழைத்த அறிஞர்களில் ஒருவர். காந்திய பொருளியலுக்கு உருவமும், உள்ளடக்கமும் கொடுத்தவர். அவருக்கு ‘கிராமக் கைத்தொழிலின் டாக்டர்’ என்று காந்தியடிகளே பட்டம் அளித்தார். உலகம் முழுவதும் புவி வெப்பமடைதலைக் குறைத்து பருவ நிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற […]

Read more

காந்தி எனும் மனிதர்

காந்தி எனும் மனிதர், மிலி கிரகாம் போலக், சர்வோதய இலக்கியப் பண்ணை, பக். 144, விலை 100ரூ. இந்நூலாசிரியர், லண்டனைச் சேர்ந்தவர். இவரது கணவர் ஹென்றி போலக் தென்னாஃபிரிக்காவில் காந்தி ஜியுடன் பல ஆண்டுகள் ஒரே வீட்டில் வசித்து, தென்னாஃபிரிக்க வாழ் இந்தியர்களுக்காகப் போராடியவர். இந்தியாவிலும் காந்திஜியுடன் இருந்து பல போராட்டங்களிலும் பங்கேற்றவர். இந்நூலாசிரியர் காந்திஜி மீது அளவிலா நேசம் கெண்டவர். ஆனாலும், காந்திஜியின் சில செயல்பாடுகள் குறித்து, தனக்கு தோன்றிய விமர்சனக் கருத்துகளையும் நேருக்கு நேர் கேட்டு வாதம் செய்தவர். இந்நூலாசிரியருக்கும், காந்திஜிக்கும் […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், டாக்டர் மா.பா. குருசாமி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 152, விலை 70ரூ. பேராசான் டாக்டர் மு. வரதராசனார், கிராமங்களுக்காக வாழ்ந்த கர்மயோகி ரா. குருசாமி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார், காந்தியப் பேராசான் மகரிஷி க. அருணாசலம், காந்தியடிகள் கனவுகண்ட கிராம சுயராஜ்யத்தை உருவாக்க வாழ்நாளெல்லாம் தொண்டு செய்த கோ. வேங்கடாஜலபதி, அன்னைதெரசா போல் தமிழகத்திற்கு சேவை செய்த பெல்ஜியத்தைச் சேர்ந்த அன்னை லியோபிரவோ, மக்கள் தலைவர் ப. ஜீவானந்தம், தனித்துவம்மிக்க சர்வோதயத் தலைவர் ச.ஜெகந்நாதன், காந்தி முதல்வர் […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, விலை 70ரூ. பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார், கம்யூனிஸ்டடு தலைவர் ப. ஜீவானந்தம், எழுத்தாளர் நா. பார்த்தசாரதி உள்ளிட்ட 16 சான்றோர்கள் பற்றி எழுத்தாளரும், பேராசிரியருமான டாக்டர் மா. பா. குருசாமி எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம். உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி, அழகிய நடையில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கிறார், மா.பா. குருசாமி. மாமனிதர்கள் பற்றிய அரிய தகவல்கள் பலவற்றை அறிய முடிகிறது. […]

Read more

மொழிபெயர்ப்புச் செம்மல் நா. தர்மராஜன் 80

மொழிபெயர்ப்புச் செம்மல் நா. தர்மராஜன் 80, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 240, விலை 200ரூ. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற்பெயர்த்தல் வேண்டும் என்றார் பாரதி. அந்தப் பணியை தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டு உழைத்து வருபவர் நா. தர்மராஜன். மூச்சுவிடுவது, சாப்பிடுவதைப்போல மொழிபெயர்ப்பும் ஓர் உடலியல் தேவை என்பதைப்போல – கடமை என்பதைப்போல எடுத்துக்கொண்டேன் என்று சொல்லும் அவர், பிற மொழிகளில் இருந்து தமிழுக்குக் கொண்டு சேர்த்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை நூறை நெருங்குகிறது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினா போன்ற உலகப் […]

Read more

மானா

மானா (இமயத்தின் மகள்), ராதா பட், தமிழில் கே.என். சாருமதி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 216, விலை 200ரூ. ராதா பட், தன் 16 வயதிலேயே கவுசானியிலுள்ள லட்சுமி ஆசிரமத்தில் சேர்ந்து, 30 ஆண்டுகளாக உத்தரகண்ட் மலைப் பகுதியில் வாழும் பெண்களுக்கு கல்விப்பயிற்சி கொடுத்துள்ளார். 1957ல் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் ஐக்கியமானார். உத்தரகண்ட் பகுதியில் மதுவிலக்கு இயக்கம் நடத்தி பெரும்பாலும் பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். ‘சிப்கோ’ இயக்கத்தில் ஈடுபட்டு வனப் பாதுகாப்பு, வனப்பொருட்களை நீடித்துப் பயன்படுத்தும் முறைகள் பற்றி பெண்களுக்கு கல்வி […]

Read more