மானா

மானா (இமயத்தின் மகள்), ராதா பட், தமிழில் கே.என். சாருமதி, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, பக். 216, விலை 200ரூ. ராதா பட், தன் 16 வயதிலேயே கவுசானியிலுள்ள லட்சுமி ஆசிரமத்தில் சேர்ந்து, 30 ஆண்டுகளாக உத்தரகண்ட் மலைப் பகுதியில் வாழும் பெண்களுக்கு கல்விப்பயிற்சி கொடுத்துள்ளார். 1957ல் வினோபாவின் பூமிதான இயக்கத்தில் ஐக்கியமானார். உத்தரகண்ட் பகுதியில் மதுவிலக்கு இயக்கம் நடத்தி பெரும்பாலும் பெண்களைப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். ‘சிப்கோ’ இயக்கத்தில் ஈடுபட்டு வனப் பாதுகாப்பு, வனப்பொருட்களை நீடித்துப் பயன்படுத்தும் முறைகள் பற்றி பெண்களுக்கு கல்வி […]

Read more

எண்ணுகிறேன் எழுதுகிறேன்

எண்ணுகிறேன் எழுதுகிறேன், நா. மகாலிங்கம், இராமானந்த அடிகளார் அறக்கட்டளை, கோவை, பக். 216, விலை 155ரூ. ஓம் சக்தி இதழில் நூலாசிரியர் எழுதிய இருபது கட்டுரைகள் இங்கே நூலாக மலர்ந்திருக்கிறது. தொழிலதிபர், கல்வியாளர், ஆன்மிகத்தில் நாட்டமுடையவர் என எல்லாருக்கும் தெரிந்த நூலாசிரியர், ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதையும் இந்நூல் மெய்ப்பிக்கிறது. காஷ்மீர் பிரச்னை, தென்னக நதிகள் இணைப்பு, சாலை நெரிசல், விவசாயிகளின் பிரச்னைகள், பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாப்பது, கிராமப்புற மருத்துவம், அரசு வழங்கும் இலவசம், சமச்சீர் கல்வி என இன்றைய உயிருள்ள பல பிரச்னைகளை […]

Read more