ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்திரமாலை

ஸ்ரீ வைஷ்ணவ ஸ்தோத்திரமாலை, மணிமேகலை சிதம்பரம், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலைரூ.200. இறைவனை கோவில்களில் சென்று வழிபடுவது போன்று, இல்லங்களிலும் அவனது ஸ்தோத்திரங்களைக் கூறிப் பலரும் வழிபடுவர். இறைவனை விட அவன் நாமம் பெரியது என்று வைணவம் கூறுகிறது. இறைவனை வழிபட 55 விதமான ஸ்தோத்திரங்கள் உள்ளன. ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரம், பஜ கோவிந்தம், ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம், ஸ்ரீ விஷ்ணு ஸகஸ்ரநாம ஸ்தோத்திரம், ஸ்ரீ ஸுதர்ச நாஷ்டகம், ஸ்ரீ கிருஷ்ணாஷ்டகம், ஸ்ரீ லஷ்மி ஸ்தோத்திரம், ஸ்ரீஸ்துதி, ஸ்ரீ ராம அஷ்டோத்திர சத நாமாவளி, […]

Read more

மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!

மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 130ரூ. மதங்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு பகவத்கீதை, பைபிள், குரான் போன்ற வேதப் புத்தகங்களிலிருந்து ஒற்றுமையுள்ள வாக்கியங்களை தேர்ந்தெடுத்து விளக்கம் அளிக்கிறது இந்நூல். இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு ஆகியவற்றின் ரகசியத்தை உலகில் இதுவரை எந்த நூலாசிரியரும் கண்டுபிடித்து எழுதவில்லை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த ரகசியத்தை முதன் முறையாக இந்நூலில் வெளிப்படுத்துகிறேன் என்கிறார் நூலாசிரியர் எம்.ஜி.ஆரோக்கியராஜன். இறைவன் பெயரில் பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அந்த மதப்பிரிவுகளில் மனிதர்கள் மனக்கசப்புடன் […]

Read more

நான் கண்ட மாமனிதர்கள்

நான் கண்ட மாமனிதர்கள், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, விலை 70ரூ. பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார், கம்யூனிஸ்டடு தலைவர் ப. ஜீவானந்தம், எழுத்தாளர் நா. பார்த்தசாரதி உள்ளிட்ட 16 சான்றோர்கள் பற்றி எழுத்தாளரும், பேராசிரியருமான டாக்டர் மா. பா. குருசாமி எழுதிய கட்டுரைகள் கொண்ட புத்தகம். உள்ளத்து உணர்ச்சிகளை எல்லாம் ஒன்று திரட்டி, அழகிய நடையில் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் விதத்தில் எழுதியிருக்கிறார், மா.பா. குருசாமி. மாமனிதர்கள் பற்றிய அரிய தகவல்கள் பலவற்றை அறிய முடிகிறது. […]

Read more