மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!
மதங்களை மறப்போம்! மனிதனை நேசிப்போம்!, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, விலை 130ரூ.
மதங்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்தோடு பகவத்கீதை, பைபிள், குரான் போன்ற வேதப் புத்தகங்களிலிருந்து ஒற்றுமையுள்ள வாக்கியங்களை தேர்ந்தெடுத்து விளக்கம் அளிக்கிறது இந்நூல். இயேசுவின் இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு ஆகியவற்றின் ரகசியத்தை உலகில் இதுவரை எந்த நூலாசிரியரும் கண்டுபிடித்து எழுதவில்லை. எனவே இரண்டாயிரம் ஆண்டுகளாக மறைந்திருந்த அந்த ரகசியத்தை முதன் முறையாக இந்நூலில் வெளிப்படுத்துகிறேன் என்கிறார் நூலாசிரியர் எம்.ஜி.ஆரோக்கியராஜன். இறைவன் பெயரில் பல மதங்களை ஏற்படுத்திக் கொண்டு அந்த மதப்பிரிவுகளில் மனிதர்கள் மனக்கசப்புடன் வாழ்வதை இறைவன் விரும்பவேமாட்டார். அப்படியானால் உலகில் மதப்பிரிவுகளே இல்லாமல் உலக மக்கள் அனைவரையும் ஒரே ஆன்மிக மார்க்கத்திற்கு கொண்டு வரக்கூடிய, ஒற்றுமையுள்ள ஆன்மிக வாக்கியங்களை ஒன்று சேர்த்த விதத்தை பல்வேறு தலைப்புகளில் விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்நூலில் ஆங்கில பதிப்பு Let the Truth Shine என்ற தலைப்பில் அமெரிக்காவில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 8/7/2015.
—-
உணவே உடல் நலம், மணிமேகலை சிதம்பரம், ஆனந்த நிலையம், சென்னை, விலை 120ரூ.
இயற்கை உணவு முறைகளையும், இயற்கை மருந்துகளைப் பற்றியும் அனைவரும் தரிந்து ஆராக்கியமான வாழ்க்கை வாழ்வதற்காக தொகுக்கப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 8/7/2015.