பட்டுத்தெறித்த பார்வைகள்

பட்டுத்தெறித்த பார்வைகள், பேராசிரியர் தி. இராசகோபாலன், நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 75ரூ.

ஆங்கிலத்திலும், தமிழிலும், பேச்சாற்றலிலும், எழுத்தாற்றலிலும் ஒருங்கே வல்லவரான பேராசிரியர் தி. இராசகோபாலன் எழுதியுள்ள பட்டுத்தெறித்த பார்வைகள் என்ற நூலில் உள்ள கருத்துகள், நடைகள் எல்லாமே பொறிகளாகத்தான் திகழ்கிறது. எடுத்துக்காட்டாக சாயம் போன சேலையை பார்த்திருப்பீர்கள். சாயம் போன சொக்காயைப் பார்த்திருப்பீர்கள். சாயம் போன ஒரு நாட்டை பார்த்திருக்கிறீர்களா? எந்த நாடு அந்த நாடு? எந்த நாடு விவசாயத்தை புறக்கணித்து, விவசாயிகளை தற்கொலைக்கு ஆளாக்குகின்றதோ, அந்த நாடு சாயம் போன நாடு. சாரம் இழந்த நாடாகும் என்று விவசாயத்தின் மேன்மையை பறைசாற்றியது போல ஒவ்வொரு பொருள் குறித்தும் ஆழமான கருத்துகளை பதித்து வைத்திருக்கிறார். என்றென்றும் மனதில் நிலைத்து நிற்கும் எழில் வாய்ந்த கருத்துகளை கொண்ட நூல் ஆகும். நன்றி: தினத்தந்தி, 8/7/2015.  

—-

தமிழர் வாழ்க்கையில் பூக்கள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, விலை 125ரூ.

இந்நூலில் இடம் பெற்றுள்ள சமகாலத் தமிழர் வாழ்க்கையுடன் தொடர்புடைய கட்டுரைகள் சமூக விமர்சனங்களாக படைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை ஒரு வகையில் பண்பாட்டுப் பதிவுகளாகவும் விளங்குகின்றன. இவை போன்று நிறைய கட்டுரைகள் வெளியாகும்போது, சூழலில் அதிர்வுகளை ஏற்படுத்த முடியும் என்கிறார் நூலாசிரியர் ந. முருகேசபாண்டியன். நன்றி: தினத்தந்தி, 8/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *