புறநானூறு மூலமும் உரையும்
புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர்., வெளியீடு டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை, விலை 400ரூ.
முச்சங்கத்துள் கடைசி சங்க காலப் புலவர்கள் ஆக்கிய எட்டுத்தொகை நூல்கள் எட்டாவதாகப் போற்றப்படுவது புறநானூறு. காலத்தால் அழியும் நிலையில் இருந்த இதனை, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் தேடிக் கண்டுபிடித்து புதுப்பித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் 1894-ம் ஆண்டு முதல் முறையாக வெளியிட்டார். தற்போது வெளியாகி இருக்கும் இந்த நூலில் புறநானூற்றுப் பாடல்கள் அனைத்தும் எளிமையான உரையுடன் இடம் பெற்று இருப்பது, படிக்க சுவையாகவும், மிக்க பயன் உள்ளதாகவும் இருக்கிறது. மேலும் இந்தப் பாடல்களில் இடம்பெற்றவர்களின் வரலாறு, அந்தக் காலத்திய உணவு முறை, உடைகள், ஆபரணங்கள், சாதிகள், பழக்கவழக்கங்கள் ஆகிய விவரங்களுடன், இந்தப் பாடல்களை தேடிக்கண்டுபிடிக்க உ.வே. சாமிநாதையர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றியும் கொடுத்து இருப்பது படிக்க சுவாரசியமாக உள்ளது. நன்றி: தினத்தந்தி, 8/7/2015.
—-
பிஞ்சு நிலாவே கொஞ்ச வா, தெய்வீகா பதிப்பகம், சென்னை, விலை 100ரூ.
சிறுவர்களுக்கான பாடல்கள், தொகுப்பு. ஒவ்வொன்றும் சிந்தனையை தூண்டுவதாக அமைந்துள்ளது. தெய்வப்புலவர், மகாத்மா, பாரதியார், அண்ணா, பெருந்தலைவர் மற்றும் மொழிக்காத்த பெரியார் என்ற தலைப்பில் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் குறித்த பாடல்கள் அருமை. சிறுவர்களுக்கான தொகுப்பு என்றபோதிலும் அனைத்து தரப்பினரும் பயன்பெறத்தக்க அனைத்து தரப்பினரும் பயன்பெறத்தக்க வகையில் பாடல்களை எழுதி இருக்கிறார் கவிஞர் செம்போடை வெ. குணசேகரன். நன்றி: தினத்தந்தி, 8/7/2015.