குடகு

குடகு, ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், பக். 160, விலை 125ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000014925.html குடகு என்பதை வலமிருந்து படித்தாலும், இடமிருந்து படித்தாலும் குடகுதான் எனும் அழகு தமிழில் துவங்கி, அந்த நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை (பக். 159) எனும் அதிசயத்தோடு முடியும் இந்த நூலில் 1959ல், சென்னையில் இருந்து பெங்களூர், மைசூர் வழியாக, குடகு சென்று அங்கு தலைக்காவேரி அடைந்து, அதன் புனிதத்தையும், சிறப்பையும் விளக்கி, குடகர்களின் மரபு, சடங்கு இவற்றை விளக்கி, குடகு மைந்தன் ஜெனரல் கே.எம். கரியப்பாவுடன் உரையாடிய நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாதுரு பக்தி, பிதுர் பக்தி, குரு பக்தி, தெய்வ பக்தி, இதுவே நமது பண்பாடு, இதை மறந்தால் நம் நாட்டின் மேன்மை குறையும் (பக். 56) எனும் கரியப்பாவின் இயல்புகளையும் கூறும் இந்த நூலில், காவேரியும் காப்பியும் தற்காலத் தமிழர்களின் இரு கண்கள். இரண்டும் உற்பத்தியாவது குடகில்தான்(பக். 91). ஆண்கள் போர்க்களத்தில் சாக வேண்டும். பெண் பிள்ளைப் பேற்றில் சாக வேண்டும் (பக். 100) என்ற குடகர் பழமொழி உட்பட இலக்கியச் சுவை பின்னிப் பிணைந்த பயண நூல் இது. -பின்னலூரான். நன்றி: தினமலர், 19/7/2015.  

—-

 

தில்லை என்னும் திருத்தலம், முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 110ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024833.html சிதம்பரம் நடராசர் கோவில் பற்றிய அரிய தகவல்களைக் கொண்ட இந்த நூலில், சிதம்பர ரகசியம் என்றால் என்ன? அந்தக் கோவிலுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு, கோவிலின் தல வரலாறு ஆகியவை தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. நடராஜர் தத்துவத்தில் அடங்கியுள்ள விஞ்ஞானம் ஆதரங்களுடன் தரப்பட்டு இருப்பதும், அங்குள்ள 108 கரண சிற்பங்களின் படங்களுடன் கூடிய விளக்கமும் இந்த நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினத்தந்தி, 8/7/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *