சைக்கோதெரபி

சைக்கோதெரபி,  அசரியா செல்வராஜ்,  கண்ணதாசன் பதிப்பகம், பக்.360, விலை ரூ.350.   உடலில் உயிர் இருக்கும்வரை உடல் நலனில் பாதிப்பு ஏற்படுவது இயல்பு. அதுபோலத்தான் மன நலப் பாதிப்பும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே ஏதோ ஒருவகையில் குறையுள்ளவர்கள்தான் என்கிறது மருத்துவத் துறை. ஒருவரது மனநிலை, பேச்சு, நடத்தை முதலியன பிறருக்குத் தாங்கவொண்ணாத வேதனையைத் தொடர்ந்து அளிக்கும்பட்சத்தில் அவருக்கு மன நலச் சிகிச்சை தேவை. மன நலச் சிகிச்சை குறித்த பல்வேறு அம்சங்களை 60 அத்தியாயங்களில் மிகவும் நுணுக்கமாக எளிய தமிழில் இந்த நூல் விளக்குகிறது. மருந்துகளைத் […]

Read more

கால்தடம் இல்லா நீலவானம்

கால்தடம் இல்லா நீலவானம், ஓஷோ, தமிழில் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ. சீனாவைச் சேர்ந்த புத்தமதத் துறவியான இஸான் ரியு என்ற குரு தொடர்பான பல செய்திகளை இந்த நூலில் தந்து இருக்கிறார் ஓஷோ, இந்தத் தகவல்களுடன், வழக்கம்போல அவரது கேள்வி-பதில் ரூபமான பிரசகங்கங்களும் பெரும் அளவில் இந்த நூலில் இடம்பிடித்து இருக்கின்றன. இடையிடையே அவர் கூறி இருக்கும் கவுதம புத்தர் பற்றிய கதைகளும், ஜென் கதைகளும் ருசிகரமானவை என்பதோடு ஆழமான கருத்துகளையும் கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வழியிலேயே ஞானம் […]

Read more

என்றென்றும் கண்ணதாசன்

என்றென்றும் கண்ணதாசன், அண்ணாதுரை கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், விலைரூ.330.   காலத்தால் அழியாத கவித் தென்றல் கண்ணதாசன். இவரின் திரைப் பாடல்கள் கேட்டு மனம் கரையாதவரே இருக்கமாட்டார்கள். அவர் திரைக்கதை சூழலுக்கு ஏற்ப பாடல்கள் எழுதுவது எல்லாருக்கும் தெரியும். ஆனால், அப்பாடல்கள் எழுந்த வீட்டுச் சூழலை வெகு அற்புதமாய் அவர் மகன் எழுதியுள்ளார். கண்ணதாசனின் 13 பிள்ளைகளில், இந்த நுாலாசிரியர் அண்ணாதுரை மட்டுமே இளம் வயதிலேயே திரைத்துறைக்கு வந்தவர். எனவே, அற்புதமான திரை அனுபவங்களால் கவிஞரை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். கவிஞரது புலமையும், […]

Read more

தி டே ஆஃப் தி ஜக்கால்

தி டே ஆஃப் தி ஜக்கால், பிரெடரிக் ஃபோர்சித், தமிழில் என்.ராமச்சந்திரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 352, விலை ரூ.200. பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியை ஒரு பயங்கரவாதக் கும்பல் கொலை செய்ய முயற்சிப்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் முறியடிக்கின்றன. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உலக அளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட துப்பறியும் நாவலின் தமிழாக்கமே இந்நூல்.< பிரான்ஸின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் சார்லஸ் டி கால் (1890-1970) தனது நாட்டின் காலனி ஆதிக்கத்துக்குள்பட்டிருந்த அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் அளிக்கிறார். இது அல்ஜீரியாவில் இருந்த பிரெஞ்ச் ராணுவத்தின் […]

Read more

கண்ணதாசன் 365

கண்ணதாசன் 365, கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 368, விலை 200ரூ. எளிய மனிதரும் உணர்ந்து, முணுமுணுக்கும் திரைப்பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். மடைதிறந்த வெள்ளம் போல், தங்குதடையின்றி வழியும் அவர் சொற்பொழிவு. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்து, உணர்ந்து வெளிப்படுத்தி, இறவாப்புகழ் படைத்தவர். அவரின் பாடல்கள், நூல்களில் இடம்பெற்ற, வாழ்விற்கு தேவையான நேர்மறை சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல். நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030094.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள்

உறுதியானவர்கள் நிலைக்கிறார்கள், ராபர்ட் ஹெச் ஷூல்லர், தர்மகீர்த்தி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 210ரூ. எப்படிப்பட்ட வேதனையான சூழ்நிலையிலும், எந்தவிதமான தோல்விகளை சந்தித்து இருந்தாலும், அவற்றில் இருந்து மீண்டு, வெற்றியாளராக பரிணமிப்பது எப்படி என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் தந்து இருக்கும் இந்த நூல், தன்னம்பிக்கையை வளர்க்கும் நூல் வரிசையில் தனி இடம் பெற்று இருக்கிறது என்று கூறலாம். ஒவ்வொருவரும் குறைகளை சரி செய்து, புரிய திறமையை வளர்த்துக்கொண்டு மறுபடி வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என்பதை இந்த நூல் ஆணித்தரமாக எடுத்துக்கூறுகிறது. நன்றி: தினத்தந்தி 3/7/19, […]

Read more

ஜென் பாடங்கள்

ஜென் பாடங்கள், தொகுப்பு யோமே எம்.குபோஸ், தமிழில் ந.முரளிதரன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.238, விலை 180ரூ. ஜென் தத்துவங்களை விளக்கும் நூல். குருவிடம் மாணவத்துறவிகள் கேள்விகள் கேட்பதும், அதற்கு குரு பதில் சொல்வதும் என்கிற முறையில் ஜென் தத்துவங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஜென் வாழ்க்கை மற்றும் இறப்பைப் பற்றி பேசுவதால் அது மதமே. ஆனால் இயற்கையைக் கடந்த, காரணகாரிய விதிக்கு அப்பாற்பட்ட ஒரு தனி இருத்தலின் மீது நம்பிக்கை வைக்காமல், சுவர்க்கம் அல்லது நரகம் போன்ற கோட்பாடுகள் இல்லாமல் ஜென் இருக்கின்றது. பெரும்பாலான மதங்கள் […]

Read more

தந்த்ரா ரகசியங்கள்

தந்த்ரா ரகசியங்கள், ஓஷோ, கண்ணதாசன் பதிப்பகம், விலை 250ரூ. விஞ்ஞான் என்றால் உணர்வு. “பைரவ் என்றால் உணர்வு கடந்த நிலை. “தந்த்ரா என்றால் யுக்தி, வழிமுறை, டெக்னிக். அதாவது, உணர்வை கடத்திச் செல்லும் யுக்தி. மற்ற மரபுகளுக்கெல்லாம் முற்றிலும் முரணானதாக தந்த்ரா தெரிவது இப்படித்தான். ஜைனர்கள் சுவையே இருக்கக் கூடாது என்கின்றனர். மகாத்மா காந்தி தன்னுடைய ஆசிரமத்தில், சுவை கூடாது என்பதை ஒரு விதியாகவே வைத்திருந்தார். எதையும் சுவைக்கக் கூடாது. சாப்பிடு, ஆனால், சுவைக்காதே; சுவையை மறந்துவிடு. சாப்பிடுவது தேவையானது. ஆனால், அதை இயந்திரத் […]

Read more

வேளாண் காதலர் வெங்கடபதி

வேளாண் காதலர் வெங்கடபதி, இராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 150, விலை 120ரூ. வேளாண் துறையில் வியத்தகு சாதனைகளைச் செய்த வேளாண் காதலர் வெங்கடபதி, ஒன்பது மாதங்கள் மட்டும், நான்காம் வகுப்பு படித்தவர்; பின் பள்ளிக்கே செல்லவில்லை. ஆனால், பெற்ற பட்டறிவு ஏராளம். மூன்று ஜனாதிபதியால் பாராட்டப் பெற்றவர். 2012ம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் வேளாண் விஞ்ஞானி. கனகாம்பரம், வெங்கடபதியின் வாழ்க்கையை தலை கீழாகப் புரட்டிப் போட்டிருக்கிறது, கனகாம்பர மலரில் வகை வகையான கண்டுபிடிப்புகளால், இன்று விவசாயியின் வாழ்க்கை வளமாகி […]

Read more

இராமாயணக் கதைகள்

இராமாயணக் கதைகள், கல்யாணி மல்லி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ. பாரத நாட்டின் இலக்கியச் செழுமைமிக்க உயரிய படைப்பாக கருதப்படுவது இராமாயணம். இராமாயணத்தின் பசுமையான கிளைகளாக விரியும் பரவசமான கதைகள், காலம் காலமாக பல தரப்பினராலும் படித்தும் கேட்டும் ரசிக்கப்படுகின்றன. எக்காலத்திய வாழ்வியலுக்கும் பொருந்தக்கூடிய தத்துவங்களும், வழிகாட்டுதல்களும் நிறைந்தவை என்பதால், அவற்றில் வரும் பல சம்பவங்கள் இன்றளவிலும் சிறுகதை வடிவங்களாக படிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னுமொரு நுால் இது. வழிப்பறி கொள்ளையர், வால்மீகி முனிவரானதும், இராமாயணம் எழுதியதும், இராமனின் பிறப்பும் மகிமையும் […]

Read more
1 2 3 15