ஜென் பாடங்கள்

ஜென் பாடங்கள், தொகுப்பு யோமே எம்.குபோஸ், தமிழில் ந.முரளிதரன், கண்ணதாசன் பதிப்பகம், பக்.238, விலை 180ரூ.

ஜென் தத்துவங்களை விளக்கும் நூல். குருவிடம் மாணவத்துறவிகள் கேள்விகள் கேட்பதும், அதற்கு குரு பதில் சொல்வதும் என்கிற முறையில் ஜென் தத்துவங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

ஜென் வாழ்க்கை மற்றும் இறப்பைப் பற்றி பேசுவதால் அது மதமே. ஆனால் இயற்கையைக் கடந்த, காரணகாரிய விதிக்கு அப்பாற்பட்ட ஒரு தனி இருத்தலின் மீது நம்பிக்கை வைக்காமல், சுவர்க்கம் அல்லது நரகம் போன்ற கோட்பாடுகள் இல்லாமல் ஜென் இருக்கின்றது. பெரும்பாலான மதங்கள் கடவுள் நம்பிக்கை, வீடு பேறு அல்லது முக்தி , வழிபாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் ஜென் சமயமானது வாழ்வின் மெய் நிகழ்வுகள், விழிப்புணர்வு, தியானம் இவற்றை அடிப்படையாகக் கொண்டது என்று ஜென் தத்துவத்தைப் பற்றி இந்நூல் கூறுகிறது.

நல்லவை, கெட்டவை, சரியானவை, தவறானவை என்று பிரித்துப் பார்க்கும் பழக்கம் நம்மிடம் உள்ளது. அவ்வாறு பிரித்துப் பார்க்கக் கூடாது. எல்லாவற்றிலும் ஒரு தனி அழகும் மதிப்பும் உள்ளது. ஒப்பீடு செய்து பார்ப்பது தவறு.விழிப்புணர்வு நிலை என்றால் வாழ்வைப் பற்றி உணர்ந்தநிலை என்று பொருள்.

நமது வாழ்நாட்களில் ஒவ்வொரு கணமும் மரணம் நேரக் கூடும் என்ற நிலையில்தான் நாம் வாழ்கின்றோம். இந்த உண்மையை மனதார நாம் உணரும்போது, நமக்கு நாமே உண்மையாகவும், அக்கறையுடனும், நேர்மையாகவும் வாழத் தொடங்குகின்றோம்.

இவ்வாறு வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளை ஒவ்வொருவர் மனதிலும் விதைக்கிறது இந்நூல்.

நன்றி: தினமணி, 24/6/19.

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *