இராமாயணக் கதைகள்
இராமாயணக் கதைகள், கல்யாணி மல்லி, கண்ணதாசன் பதிப்பகம், விலை 180ரூ.
பாரத நாட்டின் இலக்கியச் செழுமைமிக்க உயரிய படைப்பாக கருதப்படுவது இராமாயணம். இராமாயணத்தின் பசுமையான கிளைகளாக விரியும் பரவசமான கதைகள், காலம் காலமாக பல தரப்பினராலும் படித்தும் கேட்டும் ரசிக்கப்படுகின்றன.
எக்காலத்திய வாழ்வியலுக்கும் பொருந்தக்கூடிய தத்துவங்களும், வழிகாட்டுதல்களும் நிறைந்தவை என்பதால், அவற்றில் வரும் பல சம்பவங்கள் இன்றளவிலும் சிறுகதை வடிவங்களாக படிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் வந்திருக்கும் இன்னுமொரு நுால் இது.
வழிப்பறி கொள்ளையர், வால்மீகி முனிவரானதும், இராமாயணம் எழுதியதும், இராமனின் பிறப்பும் மகிமையும் தொடக்க அத்தியாயங்களாகத் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து காதைகளில் அடங்கிய சம்பவங்கள் சிறுகதைகளாகத் தரப்பட்டுள்ளன.
இவையன்றி இராமாயண மூலத்தின் சாரமாக வரும் பல சுவையான நல்லுறவுக் கிளைக்கதைகளும், நற்பண்பு உணர்த்தும் உரையாடல்களும் சீரிய வாழ்வின் செம்மைக்கு உகந்தவையே!
– மெய்ஞானி பிரபாகரபாபு
நன்றி: தினமலர், 27/1/19.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027759.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818