தி டே ஆஃப் தி ஜக்கால்
தி டே ஆஃப் தி ஜக்கால், பிரெடரிக் ஃபோர்சித், தமிழில் என்.ராமச்சந்திரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 352, விலை ரூ.200.
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியை ஒரு பயங்கரவாதக் கும்பல் கொலை செய்ய முயற்சிப்பதை அந்நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் முறியடிக்கின்றன. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உலக அளவில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட துப்பறியும் நாவலின் தமிழாக்கமே இந்நூல்.<
பிரான்ஸின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஜெனரல் சார்லஸ் டி கால் (1890-1970) தனது நாட்டின் காலனி ஆதிக்கத்துக்குள்பட்டிருந்த அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் அளிக்கிறார். இது அல்ஜீரியாவில் இருந்த பிரெஞ்ச் ராணுவத்தின் ஒரு பகுதியினருக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்திவிடுகிறது. அவர்களில் சிலர் ஒன்றுசேர்ந்து, ஜனாதிபதியை கொலை செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக, வெளிநாட்டு தொழில்முறை கொலைகாரனை ஏற்பாடு செய்கின்றனர். அவனுக்கு ஜக்கால் என்ற சங்கேத பெயரையும் சூட்டுகின்றனர்.
பிரான்ஸின் பாதுகாப்பு அமைப்புகளின் பிடியில் சிக்காமல் 6 முறை தப்பிச் செல்லும் ஜக்கால், இறுதியில் பிடிபடுகிறான். இறுதிக்கட்டம் வரை விறுவிறுப்பாகச் செல்கிறது நாவல்.
ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் வெளியாகும் கிரைம், சஸ்பென்ஸ், துப்பறியும் வகை நாவல்களை தமிழில் வாசிக்க விரும்பும் வாசகர்களை இந்நாவல் பெரிதும் ஈர்க்கும்.
நன்றி: தினமணி, 23.8.21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9f%e0%af%87-%e0%ae%86%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%9c%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818