சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி

சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக்.114, விலை 800ரூ. ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புத் தரவுகளை மணம் வீசும் மலர்களாக்கி தொடுத்து மகிழ் மாலையாக்கும் வித்தையை ஒருவர் கற்றிருந்தால் மட்டுமே, அந்தப் படைப்பு வரவேற்பைப் பெறும் என்ற கருத்தை, முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தன் முன்னுரையில் கூறியிருப்பதை, இந்த தமிழ் கூறும் நல்லுலகம் அறிய, இந்த நுால் ஒரு சிறந்த உதாரணம். தமிழ் நாளிதழ், ‘தினமலர்’ எழுத்துச் சீர்திருத்தம். கணினியில் எழுத்துருவப் […]

Read more

அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண்

அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ், விலை 220ரூ. சினிமா நட்சத்திரமாக ஒளிவீசி, பின்னர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாகத் திகழ்ந்து, தமிழக முதல்-அமைச்சராகபணிபுரிந்தவர் ஜெயலலிதா. அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறந்த முறையில் எழுதியுள்ளார் முனைவர் சந்திரிகாசுப்ரமணியன். இந்தப் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் – ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த 92 தமிழ்ப் படங்களில் 85படங்கள் வெள்ளிவிழா (25 வாரம்) கொண்டாடியவை. நடிக்க மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதிலும் திறமையானவர்.திரைப்படங்களில் 11 பாடல்கள் பாடியுள்ளார். 1968-ல் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற […]

Read more

இணையக் குற்றங்களும் இணையவெளிச் சட்டங்களும்

,இணையக் குற்றங்களும், இணையவெளிச் சட்டங்களும், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ் விலை 225ரூ. அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், மனித சமூகத்திற்கு கிடைத்த அளப்பரிய வசதி இணையம். ஆனால், வசதி, வளர்ச்சியுடன் சேர்ந்து, தவறுகளும், பிரச்னைகளும் எழுவது வழக்கம். அந்த வகையில், இணையக் குற்றங்கள் தற்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அதை கட்டுப்படுத்த, நவீன சட்டங்களும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இணையம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அது தொடர்பான குற்றங்களும், அதை தடுக்க கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்கள் […]

Read more

தில்லை என்னும் திருத்தலம்

தில்லை என்னும் திருத்தலம், முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன், கண்ணதாசன் பதிப்பகம், முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் எழுதிய இந்த இரு நூல்களில் முதலாவது முற்றிலும் ஆங்கிலமாகும். எம்பெருமான் நடம்புரிந்த பெருமைகளை பல்வேறு பெரும் மகான்கள் பாடியும், எழுதியும் வைத்திருக்கின்றனர். திருச்சிற்றம்பலம் என்னும் தில்லை அத்வைத நெறிக்கு ஆதாரமான இடம். சைவநெறியைக் காட்டும் கலங்கரை விளக்கம். புராணங்கள், நாயன்மார்கள் பாடல்கள் உட்பட பல, சிவனை வழிபட்டால், சிந்தை தெளிய வழி உண்டு என்கின்றன. ஆகவே, மங்கலத்தை நமக்கு தருபவன் சிவன் என்ற கோட்பாடுகளை ஆசிரியர் இதில் விளக்குகிறார். […]

Read more

குடகு

குடகு, ஏ.கே. செட்டியார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் லிமிடெட், பக். 160, விலை 125ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000014925.html குடகு என்பதை வலமிருந்து படித்தாலும், இடமிருந்து படித்தாலும் குடகுதான் எனும் அழகு தமிழில் துவங்கி, அந்த நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லை (பக். 159) எனும் அதிசயத்தோடு முடியும் இந்த நூலில் 1959ல், சென்னையில் இருந்து பெங்களூர், மைசூர் வழியாக, குடகு சென்று அங்கு தலைக்காவேரி அடைந்து, அதன் புனிதத்தையும், சிறப்பையும் விளக்கி, குடகர்களின் மரபு, சடங்கு இவற்றை […]

Read more